பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 43 ‘ஏ’ என்ற இடைச் சொல்லுக்குத் தேற்றம், வினா, பிரிநிலை, எண், ஈற்றசை என ஐந்து பொருள்கள் உண்டெனவும், 'உம்' என்னும் இடைச்சொல்லுக்கு எச்சம், சிறப்பு, ஐயம், எதிர்மறை, முற்று, எண், தெரிநிலை, ஆக்கம் என்னும் எட்டுப் பொருள்கள் உண்டெனவும் தொல்காப்பியர் இடையியலில் கூறியுள்ளார். தேற்றம் வினாவே, பிரிநிலை, எண்ணே, ஈற்றசை இவ்வைந்து ஏகா ரம்மே” (9) "எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கமென்று அப்பா லெட்டே உம்மைச் சொல்லே' (7) என்பன நூற்பாக்கள். ‘ஏ’ இடைச் சொல்லுக்குத் தொல்காப்பியர் கூறியுள்ள வற்றோடு இசை நிறை என்ற ஒன்று கூட்டி ஏ ஆறு பொருளில் வரும் என்று நன்னூலார் இடையியலில் கூறி யுள்ளார்: "பிரிநிலை வினா எண் ஈற்றசை தேற்றம் இசைகிறை என ஆறு ஏகாரம்மே” (3) என்பது நூற்பா. 'உம்' (உம்மை) என்னும் இடைச் சொல்லுக்கு நன்னூலாரும் எட்டுப் பொருள்கள் கூறி யுள்ளார்: எதிர்மறை சிறப்பு ஐயம் எச்சம் முற்று அளவை தெரிநிலை ஆக்கமோடு உம்மை எட்டே” (6) என்பது நூற்பா. தொல்காப்பியரும் நன்னூலாரும் 'உம்' என்னும் இடைச் சொல்லுக்கே சிறப்பு என்னும் பொருள் உண்டு என்றுள்ளனர்; ஏ என்னும் இடைச் சொல்லுக்குச் சிறப்பு « 2 என்னும் பொருள் உண்டென அவர்கள் கூறிற்றிலர். ஏ