பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு என்னும் இடைச் சொல்லும் சிறப்பு என்னும் பொருள் தரும் என அடியேன் (சு.ச.) கூறுகிறேன். இதை விளக்க மீண்டும் உன்னையே உடைய’ என்னும் தொடருக்கு வருவோம். இதற்கு, நீயே என் முழு உடைமைப் பொருள் எனப் பொருள் கூறின் ஏ தேற்ற மாகும். என் உடைமைப் பொருள்களுள் நீயே சிறந்த உடைமை எனப் பொருள் கூறின் ஏ பிரிநிலையாகும். மிகவும் சிறந்தவனாகிய உன்னையே யான் உடைமையாக உடையேன்” எனப் பொருள் கூறின் ‘ஏ’ சிறப்பு ஆகும். தொல்காப்பியரும் நன்னூல் இயற்றிய பவணந்தியாரும் கூறாத சிறப்புப் பொருள் ‘ஏ’ என்னும் இடைச் சொல்லுக்கும் உண்டு என்பதுதான் அடியேனது புதுக் கண்டுபிடிப்பாகும். பொன் = இந்திரனுக்குக் குருவும் அமைச்சருமா யிருக்கும் வியாழன். இந்திரனுக்கு வியாழன்போல, சுக்கிரீ வனுக்கு அனுமன் அமைச்சனாய் உள்ளானாம். தன்னையே அனையவன் = தனக்கு வேறு உவமையில்லாத இராமன். அவனுடைய தாள் சேர்ந்த சுக்கிரீவனுக்கு இனிக் கவலை யில்லை. இங்கே, "தனக்கு உவமை யில்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது’ (7) என்னும் குறள் ஒப்பு நோக்கத் தக்கது, கேள்வியம் கல்வியாகும் தன்னைக் கண்டு வணங்கிய சுக்கிரீவனை இராமன் வரவேற்றுத் தன் பக்கலில் அமரச் செய்தான். இருவரும் ஒருங்கு அமர்ந்திருப்பது, ஒரு செயல் (காரியம்) கைகூடு வதற்கு, முன் பிறவியில் செய்த தவமும் இப்பிறப்பில் செய்யும் முயற்சியும் சேர்ந்து கொண்ட நிலைமைபோல் இருந்ததாம்; மற்றும், இயற்கையாக உள்ள அறிவும்