பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு நாகரிகம் பெற்ற - எழுதிப் படிக்கின்ற நம் நாட்டிலும் - இப்போதும் பலர் சொற்பொழிவு வாயிலாகவும், கதை கேட்டல் (கதாகாலட்சேபம்) வாயிலாகவும் பல கருத்து களைக் கேட்டுக் கல்வியறிவு பெறுவதைக் காணலாம். படித்துப் பல்கலைக் கழகப் பட்டம் பெற்றவருங்கூட, தாம் படித்த துறையல்லாத வேறு துறைகளைப் பற்றி அத்துறை வல்லுநர்கள் பல நூல்களைப் படித்து ஆற்றும் சொற் பொழிவைக் கேட்பதால் எளிய முறையில் - குறுகிய காலத்தில் பல செய்திகளைக் கற்றுக்கொள்ளலாம். எனவே தான். "கேள்வியும் கல்வி யாகும்' எனத் திவாகரரும், கற்றிலனாயினும் கேட்க எனத் திருவள்ளுவரும் . கற்றல் கேட்டல் உடையார் பெரியார்' என ஞானசம்பந்தரும் கூறியுள்ளனர். வள்ளுவர் கேள்விக்கு என்றே ஒரு தலைப்புத் தந்து பத்துக் குறள்கள் எழுதி உள்ளார். பிறநூல்களிலும் கேள்வி பற்றிக் காணலாம். இத்தகைய கேள்வி - கல்விமட்டும் இருந்தால் ஒளி பெற இயலாது. இயற்கையான மெய்யறிவும் இருக்க வேண்டும் என்பது கம்பரால் அறிவிக்கப்பட்டுள்ளது. படித்தவர்கட்குள்ளேயே எல்லாரும் ஒளி பெறுவது (பிரகாசிப்பது) இல்லை. உண்மையான இயற்கை அறிவும் - சொந்தத்திறமையும் (Originality) இருந்தாலேயே ஒளி பெற முடியும். இங்கே, "மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதினுட்பம் யாவுள முன்னிற் பவை' (635) என்னும் குறள் எண்ணத்தக்கது. மதி நுட்பம் என்பதைத் தான் ஞானம் என்று கம்பர் குறிப்பிட்டிருக்கவேண்டும்.