பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் - 47 இந்த ஞானம்' என்பதற்குப் பரஞானம் எனப் பொருள் கூறி மேலே அழைத்துச் செல்பவர்களும் உண்டு. ஆகாதது என்? சுக்கிரீவன் இராமனை நோக்கி, உலகுக்கெல்லாம் தலைவனாகிய நின்னை அடையப் பெற்றது எனது நற்பேறு; ஊழ்வினை துணை செய்யுமாயின் அடைய முடியாதது ஒன்று மில்லை - என்றான். "நாயகன் உலகுக் கெல்லாம் என்னலாம் நலமிக் கோயை மேயினென் விதியே நல்கின் மேவலாகாது என் என்றான்” (23) என்பது பாடல் பகுதி. விதியே நல்கின் மேவலாகாது என் என்பது வேற்றுப் பொருள் வைப்பணி. பயிலாத கல்வியார் இராம இலக்குமணர் சுக்கிரீவன் முதலானோருடன் ஒரு சோலையில் தங்கினர். அச்சேர்லையில் ஆங்க்ாங்கு மிக்க ஒளியுடைய மணிகள் (இரத்தினங்கள்) பதிக்கப்பட்டுள்ளன. அம்மணிகள் வீசும் ஒளிமுன், ஞாயிற்றின் வெயில் ஒளியும் திங்களின் நிலவு ஒளியும் எடுபடவில்லை. கல்வி கேள்வி வல்ல் அறிஞர்முன் கல்வி பயிலாதவரின் செயல் செல்லாதது போல் காணப்பட்டது இந்தக் காட்சி. பாடல்: "அயர்வில் கேள்விசால் அறிஞர் வேலைமுன் - பயில்வுஇல் கல்வியார் பொலிவு இல் பான்மைபோல் குயிலு மாமணிக் குழுவு சோதியால் - வெயிலும் வெள்ளி வெண் மதியும் மேம்படா' (32) இங்கேயும் கம்பர் கேள்விச் செல்வத்தையே பெரிதாகக் குறிப்பிட்டுள்ளார். பயில்வு இல் கல்வியார் என்பதைக் கல்வி பயில்விலார் என மாற்றிப் பொருள் பண்ணல்