பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு வேண்டும். இது, திருமுருகாற்றுப் படையில் உள்ள கழிந்த உண்டியர் என்பதற்கு உண்டி கழிந்த துறவியர்' எனப் பொருள் கொள்ளல் போலவும், அகநானூற்றில் உள்ள சென்று சேக்கல்லாப்புள்ள என்னும் பகுதிக்கு, பறவைகள் சென்று சேராத குளம் எனப் பொருள்செய்தல் போலவும், பிரபுலிங்க லீலையில் நீங்கிய உடையாள் என்பதற்கு உடை நீங்கியவள் எனப் பொருள் செய்தல் போலவும் பொருள் கொள்ளவேண்டிய பகுதியாகும். இப்பாடலோடு, "கல்லாதான் ஒட்பம் கழியகன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார்' (404) "கல்லா தவரும் கனிகல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின்' (403) என்னும் குறள்களும், நாலடியாரில் உள்ள, 'கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து நல்லறி வாளர் இடைப்புக்கு-மெல்ல இருப்பினும் காயிருந் தற்றே, இராஅது உரைப்பினும் நாய்குரைத் தற்று' (254) என்னும் பாடலும் ஒப்பு நோக்கத்தக்கன. சோலையைப் பற்றிக் கூறும்போது, சிறந்த கருத்துகளை இடையிலே புகுத்தும் வாய்ப்பைக் கம்பர் நழுவவிடாதது பாராட்டத் தக்கது. துணையில்லா விருந்து சுக்கிரீவன் அளித்த காய், கனி, கிழங்கு முதலியவற்றை உண்ட இராமன் எண்ணிப் பார்க்கலானான். விருந்து பரிமாறச் சுக்கிரீவனது மனைவியைக் காணவில்லையே! கணவனும் மனைவியும் சேர்ந்து விருந்து பேணுதலே சிறப்புடைத்தாகும். இங்கே பெண் இல்லையே என்றெண்ணிச் சுக்கிரீவனை நோக்கி, தம்பியே! நீயும்