பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 49 என்னைப் போல் மனைவியைப் பிரிந்திருக்கிறாயோ என வினவினான்: பாடல் "விருந்தும் ஆகி அம் மெய்ம்மை அன்பினோடு இருந்து நோக்கி கொங்து இறைவன் சிந்தியா பொருந்தும் நன் மனைக்கு உரிய பூவையைப் பிரிந்துளாய் கொலோ நீயும்? பின்! என்றான்' (35) பூவை - பூவை போன்ற பெண் - அதாவது சுக்கிரீவன் மனைவி. இது உவமையாகுபெயர். அவரவர்க்கு அவரவர் நிலைமையே முனைப்பாயிருக்கும். சீதையைப் பிரிந்த இராமன் சுக்கிரீவனின் மனைவி இல்லாததை எளிதில் கண்டுபிடித்துவிட்டான். கணவனும் மனைவியும் சேர்ந்து படைத்தலே சிறப்பு என்பதற்கு, இலங்கையில் இருந்தபோது சீதை இராமனை நினைந்து "விருந்து கண்டபோது என்னுறுமோ என விம்மும்' என எண்ணியதும், மதுரையில் கோவலன் கண்ணகியிடம் தன் குறைகளைச் சுட்டிக் கூறி வருந்தியபோது அவள், "அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை...' எனக் குறிப்பிட்டுக் கூறியதும் போதிய சான்றாகும். இந்தப் பாடலில், இராமன் சுக்கிரீவனைப் பின் என அண்மை விளியாக விளித்ததாகக் கம்பர் கூறியுள்ளார். முன்’ என்பதற்கு அண்ணன் என்ற பொருளும் பின் என்பதற்குத் தம்பி என்ற பொருளும் உண்டு. இங்கே தம்பியே என விளித்திருப்பதைக் கொண்டு, இராமன் முதலிய நால்வருடன் குகன் ஐந்தாவதாகவும் சுக்கிரீவன் ஆறாவதாகவும் ஆன உடன்பிறப்பினர் (சகோதரர்) என்பது பெறப்படும். பின்னாலே யுத்த காண்டம் - வீடணன் அடைக்கலப் படலத்தில்