பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு 'குகனொடும் ஐவரானோம்முன்பு, பின் குன்றுசூழ்வான் மகனொடும் அறுவ ரானோம்...' (146) என்று கூறப்பட்டிருப்பதை ஈண்டு இணைத்து நோக்க வேண்டும். (குன்று சூழ்வான் - ஞாயிறு. அவன் மகன் சுக்கிரீவன்). பிரிந்துளாய் கொலோ நீயும் என்பதில் உள்ள நீயும்’ என்பது, நான் பிரிந்திருப்ப தல்லாமல் என்ற இறந்த (நடந்துவிட்ட) செய்தியைத் தழுவுவதால், இறந்தது தழுவிய எச்ச உம்மை எனப்படும். தன்னைப் போலவே சுக்கிரீவனும் மனைவியை வாலியால் இழந்தவன் என்பதனால்தான் இராமனுக்குச் சுக்கிரீவன்பால் மிகுந்த ஈடுபாடு உண்டாயிற்று எனலாம். கால்பூத ஆற்றல் அனுமன் இராமனிடம் வாலியின் வலிமை பற்றி மிகவும் விரிவர்க விளக்கினான். அவற்றுள் ஒன்று நிலம், நீர், நெருப்பு, காற்று என்னும் அழியாத நான்கு பூதங்களின் வலிமை முழுவதையும் ஒருங்க்ே பெற்றவன் வாலி - என்று கூறினான். - "நிலனும் நீரும் மாய்நெருப்பும் காற்றும் என்று உலைவில் பூதம் நான்குடைய ஆற்றலான் (39) என்பது பாடல் பகுதி. விண் என்ற பூதத்திற்கு எந்த ஆற்றலும் இல்லாமையால் இங்கே அதைக் குறிப்பிட வில்லை. உலோகாயத வாதிகள் விண் என்ற பூதத்தை ஏற்றுக் கொள்ளாமல் பூதங்கள் நான்கே என்று கூறுதல் இதனால்தான் போலும் நிலம் அசைதலோ - பிளப்பதோ செய்யின் அந்நில நடுக்கத்தைத் தடுப்பவர் யாரும் இல்லை. பூகம்பமே இவ்வாறு குறிக்கப்படுகிறது. கடல்நீர் பெருக்கெடுத்துப்