பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் -- - - - - - - 5i பெருவெள்ளமாய் வரின் தடுப்பார் இல்லை. நெருப்பு எரிமலையாய்க் கொதித்தெழுந்து தீயைக் கக்கினால் அதை அடக்குவாரில்லை. காற்று சூறாவளியாய்ச் சுழன்று முறுக்கி அடித்தால் அதை அடக்குவார் இலர். இதைப் புற நானூற்றில் உள்ள 'நீர்மிகின் சிறையும் இல்லை; தீமிகின் மன்னுயிர் கிழற்று நிழலு மில்லை; வளிமிகின் வலியும் இல்லை' (51) என்னும் பாடல் பகுதி தெளிவாக அறிவிக்கின்றது. இந்த நான்கு பூதங்களின் ஆற்றல் உடையவன் வெகுண்டால் அவனை யாராலும் வெல்ல முடியாது என்று அனுமன் கூறினான். - இவ்வாறெல்லாம் கூறி, வாலியை வெல்ல இராமனின் துணையை வேண்டினர். இராமனும் சீதையைத் தேட வானரரின் துணை தேவைப்பட்டான். முடிவாகச் சுக்கிரீவனும் இராமனும் ஒத்த நட்பு உடையராயினர்.