பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மரா மரப் படலம் ஏழு மரா மரங்களை இராமன் ஒரம்பால் துளைத்த வலிமை பற்றிக் கூறுதலின் இப்படலம் இப்பெயர்த் தாயிற்று. சுக்கிரீவனது வேண்டுகோள் வாலி சிவனிடம் மிக்க வரம் பெற்றுள்ளான் ஆதலாலும் இராவணனைப் படாதபாடு படுத்தியவன் ஆதலாலும், பகைவரின் பாதி வலிமை போரின்போது வாலிக்கு வந்து விடும் ஆதலாலும் வாலியை இராமனால் வெல்ல முடியுமா என ஐயுற்ற சுக்கிரீவன், ஏழு மரா மரங்களுள் ஒன்றை அம்பெய்தித் துளைக்குமாறு வேண்டினான்.

ஏகவேண்டும் இந்நெறியென இனிது கொண்டேகி

மாகம் நீண்டன குறுகிட கிமிர்ந்தன மரங்கள் ஆக ஐந்தினோடு இரண்டின்ஒன்று உருவ நின்அம்பு போகவே என்றன் மனத்திடர் போமெனப் புகன்றான்’ (1) மாகம் = விண். ஐந்தினோடு இரண்டு = ஏழு. இவ் வழியாகப் போகவேண்டும் என இராமனுக்கு இனிதே வழி காட்டிச் சுக்கிரீவன் அழைத்துக் கொண்டு சென்று, விண்ணளாவ உயர்ந்துள்ள இந்த மராமரங்களுள் ஒன்றைத் துளைத்து உருவி நின் அம்பு போனால் எனது துயரும் போகும் என்றான். உனது வலிமையைக் கண்டறிய இதைச் செய்து காட்ட வேண்டுமென வெளிப்படையாகச் சுக்கிரீவன் இராமனிடம் அறிவிக்கவில்லை. நயமாகக் . குறிப்பாகத் தெரிவித்தான். இராமனால் வாலியைக்