பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. கிட்கிந்தா காண்டத் திறனாய்வு "எள்ளல் இளமை பேதைமை மடன் என்று உள்ளப் பட்ட நகை நான்கு என்ப” (4) என்பது நூற்பா. இராமனுக்கு ஏற்பட்ட முறுவல், மிகவும் எளியது என்னும் எள்ளல் காரணமாக ஏற்பட்டதாகும். புன்முறுவல் எவ்வளவோ கொடுமைகளைத் தீர்த்து வைக்கும் அரிய பெரிய மருந்தாகும். அதுவும், விலை யில்லாத மருந்தாகும். அதை இராமன் பயன்படுத்தி நிலைமையை ஒழுங்கு செய்தான். தரு கிழல் சீதம் ஏழு மராமரங்களின் சிறப்பைப் பல பாடல்களால் கம்பர் புனைந்துரைத்துள்ளார். அவற்றுள் ஒன்று, அவை தரும் குளிர்ச்சியைப் பற்றியது. அதாவது: ஒரு குதிரை வண்டியில் தொடர்ந்து பன்னிரண்டு மணி நேரம் பயணம் செய்யின், குதிரை ஒரே மாதிரியான விரைவுடன் நாள் முழுதும் தொடர்ந்து செல்லமுடியாது. இடையிடையே களைப்பு ஏற்படுங்கால், சில இடங்களில் மெதுவாகவும் செல்லக்கூடும். வண்டி ஒட்டுபவரும் அதன் களைப்பை அறிந்து இடையிலே ஒய்வு கொடுப்பார். ஆனால் ஞாயிறின் தேரை இழுத்துச்செல்லும் ஏழு குதிரைகளும் நாள் முழுதும் களைப்பின்றி ஒரே மாதிரியான விரைவுடன் செல்கின்றன . அதற்கு ஒரே ஒரு காரணந்தான் சொல்ல முடியும். அதாவது, இந்த மராமரச் சோலைகள் தரும் குளிர்ச்சியால் வெப்பம் தணிந்து களைப்படையாமல் இருப்பது தான் அது. "ஒக்க நாளெலாம் உழல்வன உலைவு இலவாக மிக்கதோர் பொருள் உளதென வேறுகண் டிலமால் திக்கும் வானமும் செறிந்த அத்தருகிழல் சீதம் புக்கு நீங்கலின் தளர்வில இரவி தேர்ப் புரவி' (5)