பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 55 உலைவு = தளர்ச்சி. தரு = மரம். சீதம் = குளிர்ச்சி. இரவி = ஞாயிறு. புரவி = குதிரை, ஞாயிற்றின் தேர்க் குதிரைகள் இந்த மராமரச் சோலை வழியாகச் செல்கின்றனவாம். நெடுந்தொலைவு நடந்து செல்லும் மக்கள் வெயில் நேரத்தில் ஒரிடத்தில் தங்கி இளைப்பாறிவிட்டுப் பின்னர்ச் செல்வது வழக்கம். வெப்பம் தாக்காமல் இருப்பதற்காகவே வழியின் இருமருங்கும் பெரிய மரங்களை உண்டாக்கி வைத்தனர். மற்றும், ஒவ்வோர் ஊரின் புறத்தும் பெரிய மரங்களும் குளமும் மண்டபமும் கட்டி வைத்தனர். இஃதும், வெப்ப நேரத்தில் தங்கிக் களைப் பாறிச் செல்வதற்கேயாம். வெயிலின் வெப்ப நேரத்தில் வேலை ஒடாதாதலின் குளிர் பதனம் (Air Condition) செய்யப்பட்ட அறைகளில் அலுவலர்கள் (ஆபீசர்கள்) தங்கி வேலை செய்வதும் ஈண்டு எண்ணத் தக்கது. சர் வால்டர் ஸ்காட் (Sir Waitor Scott) என்னும் ஆங்கிலப் பெரும் புலவர் கோடைக் காலத்தில் எழுத்துப் பணி செய்வது கடினமானது என்பதால், குளிர் காலத்திலேயே நிறைய எழுதித் தள்ளி விடுவார் என்பதாக அவர் வரலாறு கூறுகிறது. நீதி மன்றங்கட்கும் கல்விக் கூடங்கட்கும் கோடைக் காலத்தில் நீண்ட விடுமுறை விடுவதும் இது பற்றியே. புகாரிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற வழியில், கவுந்தி, கோவலன், கண்ணகி ஆகிய மூவரும் வெயிலுக்கு அஞ்சிச் சில நாள் இரவில் பயணம் செய்ததாகச் சிலப்பதி காரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையுடன் நோக்குங்கால், வெப்பம் மிக்க ஞாயிற்றின் குதிரைகள் வெப்பத்த்ால் க்ளைப்படையாமல் நாள் முழுவதும் ஒரே மாதிரியாகச் செல்வதற்கு மராமரச் சோலை தரும் குளிர்தான் காரணம் எனக் கற்பனை செய்திருப்பது பொருத்தமே. நடவாத கற்பனையாயிருப்