பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு பினும் அதற்கும் ஒரு பொருத்தம் வேண்டுமே இங்கே, கற்பனைக் களஞ்சியம் என்னும் சிறப்புப் பட்டம் பெற்ற சிவப்பிரகாச அடிகளார் தமது பிரபு லிங்க லீலை என்னும் நூலில் - வசவண்ணர் கதியில் ஒரு மொழியின் குளிர்ச்சி மிகுதியைக் கற்பனை செய்திருப்பதை இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் காணலாம்: கலியாணபுரம் என்னும் ஊரிலுள்ள ஒரு பொழில், ஞாயிற்றின் வெயிலை வெறுத்துத் தன்னிடம் வந்து தங்கிய வர்களை மீண்டும் ஞாயிற்றின் வெயிலை விரும்பச் செய்யு மாம். அதாவது, வெயிலுக்கு அஞ்சி அப்பொழிலில் புகுந்தால் அதன் குளிர்ச்சியைத் தாங்க முடியாமல் உடல் நடுங்க, மீண்டும் வெயிலை நாட வேண்டியதாயிருக்குமாம். அப்பொழில் வண்டுக் கூட்டங்கள் விருந்துண்ணும் மலர் களை உடையதாம். தேவரும் விரும்பும் தன்மையுடைய தாம். பாடல்: . "தனைவிரும்பி வந்தடைந்தவர் தம்மை முன்வெறுத்த தினகரன்கதிர் விரும்புறச் செய்து அளித்திரள்கள் கனி விருந்துணும் கடிமலர்சுமந்து பொன்னகரார் கனிவிரும்பு தண்பொழில் நிகழ்வதை எதிர்காணாய் (11) என்பது பாடல். தினகரன் கதிர் = ஞாயிற்றின் வெயில். பொன் நகரார் = தேவர்கள். ஒரு பொழிலின் குளிர்ச்சி மிகுதியைப் புனைந்துரைப்பதில், கம்பரும் சிவப்பிரகாசரும் ஒருவர்க்கொருவர் இளைத்தவராகத் தெரிய வில்லை யன்றோ! நாண் ஒலி இராமன் நாண் ஒலி எழுப்பியதும், அவ்வொலியைக் கேட்டுத் தேவரும் நடுங்கினராம். இராமனின் தம்பியாகிய இலக்குமணன் மட்டும் நடுங்காமல் பக்கத்தில் நின்றிருந்