பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 57 தான். சுக்கிரீவன், அனுமன் முதலியோரும் நடுங்கினர் என்று வெளிப்படையாகச் சொல்லின் அவர்களைக் குறைவு படுத்துவதாகும் என்று குறிப்பாகக் கூறியுள்ளார் கம்பர். 'அரிந்த மன்சிலை நாண்நெடிது ஆர்த்தலும் அமரர் இரிந்து நீங்கினர் கற்பத்தின் இறுதியென்று அயிர்த்தார் பரிந்த தம்பியே பாங்குகின்றான் மற்றைப் பல்லோர் புரிந்த தன்மையை உணரசெயின் பழிஅவர்ப் புணரும்' (14) அனுமன் முதலிய வானரரும் அஞ்சினர் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல், அவ்வாறு சொன்னால் அவர்கட்குக் குறைவு ஏற்படும் என்று அவர்களின் அச்சத்தைக் குறிப்பாகப் புலப்படுத்தியுள்ளார் ஆசிரியர். உலக வழக்கில் கூட, நான் சொல்லப் போனால் அவர்கட்கு வருத்தமாயிருக்கும் எனப் பிறரின் குற்றத்தைக் குறிப்பாய் ஒருவர் குறிப்பிடுவதுபோல் இருக்கிறது இது. கம்பரின் கருத்து வெளிப்பாட்டில் இது ஒரு புதுமையாகும். ஏழோ ஏழு இராமன் அம்பு எய்ததும், அந்த அம்பு, ஏழு மராமரங் களையும் துளைத்துக் கொண்டு கீழ் உலகம் ஏழிலும் புகுந்து உருவி, மீண்டும் ஏழாக உள்ள பொருள்கள் தென்படாமை யால் இராமனிடம் வந்து சேர்ந்ததாம். இன்னும் ஏழாம் பொருள்கள் எவையேனும் இருப்பின் வாளா விடாது அந்த அம்பு! "ஏழுமாமரம் உருவிக் கீழுலகம் என்றிசைக்கும் ஏழுமூடுபுக்கு உருவிப்பின் உடன்.அடுத் தியன்ற ஏழிலாமையால் மீண்டது.அவ் விராகவன் பகழி ஏழுகண்டபின் உருவுமால் ஒழிவதன்று இன்னும்’ (16) மா மரம் என்பது மாங்காய் மரம் அன்று; பெரிய மரம் என்பது அதன் பொருள். ஒரு வகை ஆச்சாமரம் இது எனப்படுகின்றது. இஃதும் கருத்து வெளியீட்டில் ஒரு புதுமையாகும். விட்ட படைக்கலன் வெளியிலேயே தங்கி