பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு விடின் அதற்கு அத்திரம் (அஸ்திரம்) என்று பெயராம். விட்டவரிடம் மீண்டும் வந்து சேர்ந்துவிடும் படைக்கலத் திற்கு சத்திரம் (சஸ்திரம்) என்று பெயராம். முருகனது வேல்படையும் மீண்டும் முருகனிடம் வந்து தங்கும் சத்திர மாகும். இவை வடமொழிப் பெயர்களாகும். ‘ஏழு'களின் அச்சம் இராமனது அம்பு ஏழாயுள்ள மராமரங்களையும் கீழ் ஏழ் உலகங்களையும் துருவியதால், ஏழாக உள்ள மற்றவையும் அஞ்சத் தொடங்கினவாம். அதாவது:கடல்கள் ஏழும், மேலுலகம் ஏழும், மலைகள் ஏழும், முனிவர்கள் எழுவரும், ஞாயிற்றின் குதிரைகள் ஏழும், கன்னியர் எழுவரும், இராமனது அம்புக்கு ஏழு என்பது குறியாக இருப்பதால் தம்மையும் வந்து தாக்கக்கூடுமோ என அஞ்சி நடுங்கியதாகக் கம்பர் கற்பனை செய்துள்ளார். 'ஏழு வேலையும் உலகமே லுயர்ந்தன ஏழும் ஏழு குன்றமும் இருடிகள் எழுவரும் புரவி ஏழும் மங்கையர் எழுவரும் நடுங்கினர் என்ப ஏழு பெற்றதோ இக்கணைக்கு இலக்கம் ೧pಣ್ಣ என்பது பாடல். இஃதும் கருத்து வெளியீட்டில் ஒரு புதுமையாகும். ரிஷிகள் எனக் கிரந்த எழுத்தைக் கலக்காமல் இருடிகள்’ எனத் தமிழ் எழுத்தைக் கொண்டே சரி செய்யும் கம்பரின் மொழிக்கொள்கை பாராட்டிற் குரியது. எல்லாம் நீ . மகிழ்ச்சி மேலீட்டால் சுக்கிரீவன் பின்வருமாறு இராமனைப் புகழ்கிறான். நிலமும் நீ. வானமும், நீ, மற்ற காற்று, நெருப்பு, நீர் என்னும் பூதங்களும் நீ. நான் முகனும் திருமாலும் சிவனும் நீயே. தீய வினைகளைப்