பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 59 போக்கும் தெய்வமும் நீயே, உலகமெல்லாம் முன்னர் உண்டாக்கினவனும் நீயே. இப்போது நாயேனாகிய அடியேன் உய்யும்படி வந்து அருள் புரிந்தாய் - என்று போற்றினான்: "வையம்ரீ வானும் மற்றுரீ மலரின்மேல் ஐயன்ரீ ஆழிமேல் ஆழிமா மாலும்t செய்யன்ரீ வினைதெறும் தேவும்நீ நாயினேன் உய்யவந்து உதவினாய் உலகம்முந்து உதவினாய்’ (19) மலரின் மேல் ஐயன் = பிரமன், ஆழிமேல் = கடலின் மேல் அறிதுயில் கொள்ளும், ஆழி = சக்கரப் படையுடைய, மா மால் = சிறந்த திருமால். செய்யன் = சிவன். திருமால் கரியன்; அதனால் சிவனைச் செய்யன் என விதந்து கூற இடம் உண்டாயிற்று, சிவனென்னும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்’ என்னும் தொடர் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது, பவளம்போல் மேனி என நாவுக்கரசரும், பொன்னார் மேனியனே' எனச் சுந்தரரும், இன்ன பிறரும் சிவனைச் செந் நிறத்தனாகக் கூறியுள்ளமை ஈண்டு எண்ணத்தக்கது. நான்முகன், திருமால், சிவன் என்று கூறியுள்ள வரிசை முறையும் எண்ணத்தக்கது. அடியருக்கு அடியன்: மேலும் சுக்கிரீவன், தாய் போன்ற நின் அடியார்கட் கெல்லாம் அடியவன் யான் என இராமனைப் புகழ்கிறான்: 'அன்னை ஒப்புடைய உன் அடியவருக்கு அடியவன் யான்’ (20) என்பது பாடல் பகுதி. சுந்தரர், திருத்தொண்டைத் தொகைப் பதிகத்தில் தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று தொடங்கி, பல இடங்களிலும் “அடியார்க்கு அடியேன்” என்று கூறிச் சென்றுள்ள முறை இங்கே நினைவிற்கு வருகிறது.