பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. துந்துபிப் படலம் துந்துபி என்பவன் மயன் மகனான ஒர் அசுரன்; எருமை வடிவு உடையவன். இவன் துந்துபிபோல் ஒலி எழுப்புவதால் துந்துபி எனப்பட்டான். நீண்டு பருத்த மலை போன்ற உருவமுடைய இவன், பலரைப் போருக்கு அழைத்து, இறுதியாக வாலியிடம் வந்தான். வாலியும் இவனும் ஒராண்டு காலம் போர் புரிந்தனர். இறுதியில் வாலி துந்துபியைக் கொன்று அவனது மலையனைய உடலைக் கையால் உயரே தூக்கித் தொலைவில் செல்லுமாறு எறிந்தான். அது, மதங்க முனிவரின் இருப்பிடமாகிய உருசியமூக மலையில் போய் விழுந்தது. அதனால் அந்த இடம்3துாய்மையிழந்ததால், முனிவர் சினந்து, இந்த உடலை இங்கே எறிந்த வாலி இங்கு வருவானாயின் இறப்பானாக என்றும், அவனைச் சேர்ந்தோர் வரின் கல்லாக மாறுக என்றும் வைவு (சாபம்) இட்டார். அதனால், வாலி வரமாட்டான் என நம்பிச் சுக்கிரீவன் முதலியோர் அம்மலைப் பகுதியில் மறைந்து வாழ்ந்து வருகின்றனர். தசை வற்றிக் காய்ந்து போய்க் கிடந்த மலையணைய அவ்வுடலை அப்புறப்படுத்துபவர் பெரிய வல்லமை யுடையவர் என்பதையறிய, இராமனிடம் அதை அப்புறப் படுத்தும்படிச் சுக்கிரீவன் கூறினான். இராமன் இலக்குமண னிடம் கூறினான். இலக்குமணன் தன் கால் விரலால் எற்றி வெகுதொலைவில் போய் விழுமாறு செய்தான். இதைப் பற்றியதுதான் துந்துபிப் படலம்.