பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கலன்காண் படலம் இராவணன் வான் வழியே சீதையை எடுத்துச் சென்ற போது, சீதை தன் அணிகலன்களையெல்லாம் கழற்றித் துணியின் ஒரு பகுதியைக் கிழித்து அதில் வைத்துக் கட்டிக் கீழே எறிந்தாள். அந்த முடிச்சு வானரர்கள் இருக்கும் மலைப் பகுதியில் விழுந்தது; அவர்கள் எடுத்து வைத் திருந்தனர். - இப்போது எல்லா வரலாறும் தெரிந்து கொண்ட சுக்கிரீவன் அவை சீதையின் அணிகலன்கள் என உய்த் துணர்ந்து, நகை முடிச்சை இராமன்பால் தந்தான். இராமன் அந்த அணிகலன்களைக் கலக்கத்துடன் கண்டு கண்ணிரால் கழுவினான். அவ்வாறு இராமன் அணிகலன் கண்ட செய்தியைக் கூறும் பகுதியாதலின், இது கலன் காண் படலம்’ என்னும் பெயர்த்தாயிற்று. இந்த நிகழ்ச்சி, சோழன் இளஞ்சேட்சென்னியை ஊன் பொதி பசுங் கொடையார் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றில் மிகவும் அழகாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புலவரின் சுற்றத்தினர்க்குச் சோழன் மிகுந்த அணி கலன்களைத் தந்தானாம். அவை பிறருக்குத் தருவதற்காக எளிமையாய்ச் செய்யப்பட்டன அல்லவாம். மிகவும் உயர்ந்தனவாம். அத்தகைய அணிகலன்களை முன்பு அறியாத சுற்றத்தார், கைவிரலில் அணிய வேண்டியதைக் காதிலும், காதில் அணிய வேண்டியதை விரலிலும், அரை யில் அணிய வேண்டியதைக் கழுத்திலும், கழுத்தில் அணிய வேண்டியதை அரையிலுமாக மாற்றி மாற்றி அணிந்து