பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு கொண்டனராம். இதற்குக் காட்டப்பட்டுள்ள உவமை, இராவணன் சீதையை எடுத்துச் சென்ற போது அவள் கீழே எறிந்த அணிகலன்களைக் குரங்குகள் எடுத்து உரிய உறுப்புகளில் அணியாமல் உறுப்பு மாற்றி வேறு உறுப்பில் அணிந்து கொண்டமையாகும். பாடல் பகுதி: “எமக்கென வகுத்த அல்ல மிகப்பல மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை தாங்காது பொழிதங் தோனே அதுகண்டு இலம்பா டுழந்தஎன் இரும்பேர் ஒக்கல் விறல்செறி மரபின செவி தொடுக் குநரும் செவித்தொடர் மரபின விறல்செறிக் குங்ரும் அரைக்கு அமை மரபின மிடற்றியாக் குநரும் மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும், கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை யரக்கன் வெளவிய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிங் தாஅங்கு அறாஅ வருகை இனிது பெற் றிகுமே" (178; 10-22) இப் புறநானூற்றுப் பாடல் காலத்திலேயே இராமாயணக் கதை தமிழ்நாட்டில் நடமாடியுள்ளமை இதனால் புலனா கிறது. சுக்கிரீவன் அறிவிப்பு இப்பக்கத்தில் உள்ளவர்கள் பணியாளர்போல் எடுத்துக் காத்து வைத்திருந்து நம் கணவரிடம் தரலாம் என்று எண்ணியோ அல்லது வேறு கருதியோ, அந்த அம்மையார் கண்ணிர் வெள்ளத்தோடு இந்த நகைப் பொதியையும் கீழே எறிந்தார்; அதை நாங்கள் எடுத்து வைத்திருந்தோம்; நீங்கள் இங்கு வந்ததும் நீங்கள் அறியும்படி தந்தோம் -