பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 65 என்று தேனோடு பால் கலந்தாற் போன்ற அன்புடைய சுக்கிரீவன் அறிவித்து நகைப் பொதியை இராமனிடம் தந்தான். பாடல்கள்: "உழையரின் உணர்த்துவது உளதென்று உன்னியோ குழைபொரு கண்ணினாள் குறித்தது ஒர்ந்திலம் மழைபொரு கண்ணிணை வாரி யோடுதன் இழைபொதிங் திட்டனள் யாங்கள் ஏற்றனம்' (3) வைத்தனம் இவ்வழி வள்ளல் நின்வயின் உய்த்தனம் தந்தபோது உணர்தியால் எனாக் கைத்தலத்து அன்னவை கொணர்ந்து காட்டினான் கெய்த்தலைப் பால்கலங் தனைய நேயத்தான்' (4) உழையர் = பக்கத்துள்ளோர்; பணியாளர். குழைபொரு கண்ணினாள் = குழையணிந்த காதை மோதும் கண்ணை உடைய சீதை. பெண்டிரின் கண்கள் காதுவரையும் நீண்டிருப்பதாகக் கூறுவது இலக்கிய மரபு. விசாலாட்சி என்னும் பெயரின் பொருள் இதுவே. விசாலமான அட்சம் (கண்) உடையவள் என்பது பொருள். பரந்த கண்ணோட்டம் - அருள்பார்வை உடையவள் தேவி என்னும் பொருளில் விசாலாட்சி என்னும் பெயர் அமைந் துள்ளது. வாய்தான் காதுவரையும் நீளக் கூடாது - நீண்டால் வாயாடி என்பர். கண் நீளலாம் போலும். இங்கே, குழை என்பது ஆகுபெயராய் அணிபூண்ட காதைக் குறிக்கிறது. வாரி = வெள்ளம். இழை = அணிகலங்கள். வள்ளல் = இராமன். - நெய் என்பதற்குத் தேன் என்னும் பொருள் உண்மையை "வரைமிசை மேல்தொடுத்த நெய்க்கண் இறாஅல்” (42:22) என்னும் கலித்தொகைப் பாடல் பகுதியால் அறியலாம். இறால் = தேன்கூடு. தேனுக்கும் இறாலுக்கும் உள்ள தொடர்பை அதே கலித்தொகையில் உள்ள வரைத்