பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு தேனின் இறாலென” (39) என்னும் பாடல் பகுதியாலும் அறியலாம். இதனால், நெய் என்பதற்குத் தேன் என்னும் பொருள் உள்ளமை தெளிவு. மற்றும், 'நெய்ம்முதிர் தொடையல்’ (1198) (தேன் உள்ள மலர்மாலை) என்னும் சீவக சிந்தாமணிப் பாடல் பகுதியும் தக்க சான்றாகும். 'நெய்த்தலைப் பால் கலந்தனைய நேயத்தான்” என்னும் பகுதி குறிப்பிடத்தக்கது. நெய் = தேன். தலை என்பது ஏழாம் வேற்றுமை உருபு. எனவே, நெய்த்தலை என்பதற்கு நெய்யில் எனப் பொருள் கொள்ளல் வேண்டும். தேனில் பால் கலந்தாற் போன்ற அன்புடையவனாம் சுக்கிரீவன். சுக்கிரீவனும் இராமனும் தேனும் பாலும் போன்றவர்களாம். அதாவது, இவர்களின் நட்பு இனியதுநயமானது என்பது கருத்து. 'கவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு" (783) என்பதனாலும் நல்ல நட்பு நயமானது என்பது பெறப்படும். பாலும் தேனும் கலப்பது இலக்கியங்களில் மிகவும் பெரிது படுத்திப் பேசப்பட்டுள்ளது. சில காண்பாம்: பாலொடு தேன் கலந்தற்றே பனிமொழி வாலெயிறு ஊறிய நீர்” (1.121) இது திருக்குறள். ஞானசம்பந்தர் தேவாரத்தில், 'சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால் முறையாலே உணத் தருவன்' (திருத்தோணிபுரம்-10) என்றுள்ளது. சீவக சிந்தாமணியில் 'தேனில் பாலென’’ (1761), பால் நிலத்துறையும் தீந்தேன் அனைய (1915), தேம்பெய் மாரி பாற்கடல் பெய்தது’ (2077) எனவும், சூளாமணியில் நெய்த்தலைப் பால் உக்காங்கு” (சுயம்வரம் -275) எனவும், பெருங்கதையில்