பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு 1941-திசம்பர்-29, 30, 31 ஆம் நாள்களில், சீர்காழியில், மகாமகோபாத்தியாய - பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் தலைமையில் சென்னை சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் மாநாடு நடைபெற்றது. அதில் அடியேன் 'தமிழ்ச் சொல் மலர்' என்னும் தலைப்பில் சொற்பொழி வாற்றினேன். பண்டிதமணியின் செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது. அவர், திருவள்ளுவரின் பாலொடு தேன் கலந்தற்று என்ற முறைவைப்புக்கும், ஞானசம்பந்தரின் தேனொடு பால் முறையாலே தருவன்’ என்ற முறை வைப்புக்கும் ஏதோ வேறுபாட்டு விளக்கம் கூறினார். அந்த விளக்கம் இப்போது நினைவில்லை. ஆனால் இங்கே உள்ள கம்பரின் நெய்த்தலைப் பால் கலந்தனைய' என்ற முறை வைப்புக்கு விளக்கம் கூறமுடியும். நெய் சுக்கிரீவன்-பால் - இராமன் என முன்னமேயே சொல்லப்பட்டது. நெய் இருந்த இடத்தில்தான் பால் வந்து கலந்தது. சுக்கிரீவன் இருந்த மலைப்பகுதிக்கு இராமர்தான் வந்தார். எனவே, இங்கே, நெய்யை (தேனை) முன்னரும் பாலைப் பின்னருமாகக் கம்பர் அமைத்துள்ள முறைவைப்பு மிகவும் பொருத்தமானதே. படிவம் ஆன சீதையின் அணிகலன்களை இராமன் கண்டதும், ஒவ்வோர் அணியும் அது அணியப்பட்டிருந்த படிவத்தைக் (உருவத்தைக்) காட்டினவாம். - கல்குவது என்னினி கங்கை கொங்கையைப் புல்கிய பூணுமக் கொங்கை போன்றன அல்குலின் அணிகளும் அல்கு லாயின பல்கலன் பிறவும் அப்படிவம் ஆனவே” (6) நங்கை = சீதை. கொங்கை=முலை. அல்குல் = இடுப்பு. படிவம்= வடிவம். இப்பாடலில் உள்ள நயமாவது அணிகள்