பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 69 அவை அணியப்பட்ட உறுப்புகளை நினைவுபடுத்தியதோடு நின்று விடவில்லை - அந்த அந்த உறுப்புகளாகவே மாறினவாம். அப்படிவம் ஆன என்பதன் உட்கிடை இதுதான். உலகியலில், இறந்து போனவர் அல்லது பிரிந்து போனவர் கையாண்ட பொருள்களையெல்லாம் காணும் போது, அவர்களின் நினைவு ஏன் அவர்களின் தோற்றம் காண்பவரின் உளக் கண்கட்குத் தெரிவது இயல்பு. சிலர் அப்பொருள்களை வைத்துக்கொண்டு பிரிந்தவராகவே எண்ணிப் புலம்புவது கண்கூடு. இராமனும் இதற்கு விதி விலக்கு இல்லை. உயிர் வாங்கல் இராமன் சீதையை நினைந்து புலம்பி மயங்கிய நிலையில், சுக்கிரீவன் சொல்கிறான்: இராமனே! இந்த அணிகலன்களை நினக்குக் காட்டியதால், நினது உயிரை வாங்கும் தீய வினை செய்தவனானேன் என்கிறான். இது உள்ளத்தைத் தொடும் கருத்தாகும். "வீங்கிய தோளினாய் வினையினேன் உயிர் வாங்கினென் இவ்வணி வருவித்தே எனா” (11) என்பது பாடல் பகுதி. வீங்கிய தோளினன் இராமன். வினையினேன் என்பது, நான் தீவினையாளன் எனச் சுக்கிரீவன் தன்னைக் குறித்துக் கொள்வது. இந்தக் கருத்து வெளிப்பாடும் சுவையானது. உலகியலிலும் இவ்வாறு கூறி வருந்தும் சூழ்நிலை ஏற்படுவதுண்டு. மூவருமான ஒருவர் சுக்கிரீவன் பல கூறி இராமனைத் தேற்றுகிறான். ஐயனே! தாமரையில் இருக்கும் நான்முகன், முருகனைப் பெற்ற உமையை இடப்பாகத்தில் உடைய சிவன், கையில்