பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு ஆழி (சக்கரம்) ஏந்திய திருமால் ஆகிய மூவரும், தனித் தனியாக நோக்கின் உனக்கு ஒப்பாகார்; அம்மூவரும் சேர்ந்த அமைப்பே உனக்கு ஒப்பாகும். அங்ஙனமிருக்க நீ வருந்துவதேன் என்றான். 'முளரிமேல் வைகுவான் முருகன் தந்தவத் தளரியல் பாகத்தான் தடக்கை ஆழியான் அளவி ஒன்றாவரே யன்றி ஐயமில் கிளவியாய் தனித்தனிக் கிடைப்பரோ துணை' (13) முளரி = தாமரை, தளிர்இயல் = தளிர் போன்ற மென்மைத் தன்மை உடைய உமாதேவி. இது இலக்கணத் தில், உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும். அளவி = கலந்து, சேர்ந்து. ஐயம்இல் கிளவியான் = இராமன். இந்தக் கருத்து வெளிப்பாடும் கம்பரின் கவி வன்மைக்குத் தக்க சான்றாகும். சிறு குறையும் பெரிய குறையும் ஒர் உயரிய பண்பினைச் சுக்கிரீவன் வாயிலாகக் கம்பர் உலகுக்கு அறிவுறுத்தியுள்ளார். பிறரைப் பற்றிக் கவலைப் படாமல், முதலில் தம் வேலைகளை முடித்துக் கொள்பவர் களே உலகில் மிகுதியாயுள்ளனர். முதலில் தாம் உணவுண்டு படுத்துத் துரங்க வேண்டும் என்பவர் பலராயிருக்க, எல்லாரை யும் உண்ணச் செய்து முடித்தபின் இறுதியில் மீந்திருப்பதைத் தாம் உண்ணுபவர் சிலரா யுள்ளனர். ஒருவர் பின் ஒருவர் (கியூ) வரிசையில் முறையாக நிற்காமல், வரிசையில் நிற்பவரை இடித்துத் தள்ளி முந்திக் கொண்டு சென்று தம் வேலையை முதலில் முடித்துக் கொள்ளும் திருமேனிகளும் உண்டு. உலக நிலைமை இப்படியிருக்க, இராமனது பெருந் துயரத்தைக் கண்ணுற்ற சுக்கிரீவன் உயரிய பண்பு