பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு "விலங்கெழில் தோளினாய் வினைவினேனும் இவ் இலங்குவில் கரத்தினில் இருக்கவே அவள் கலன் கழித்தனள் இது கற்பு மேவிய பொலன்குழைத் தெரிவையர் புரிந்துளோர்கள் யார்? (20) விலங்கு எழில் தோளினான்= சுக்கிரீவன் வினையினேன்= இராமனாகிய நான். அவள் = சீதை. தெரிவையர் = மகளிர். கற்புடைய மங்கையர் கணவன் இருக்கும்போது அணிகலன் கள் அணிந்திருப்பர். கணவன் இறந்தால் அணிகலன்களை ஆடம்பரமாய் அணிந்திருக்க மாட்டார்கள். சீதையோ யான் இருக்கும்போதே, ஆடம்பரமான அணிகலன்கள் வேண்டா எனத் துறந்துவிட்டாள். இவ்வாறு செய்யக் கூடியவர் யார் இருக்க முடியும்? யான் கையில் வில் ஏந்தி யிருப்பதால் யாது பயன் - என்றான் இராமன். பேடிகை வாளாண்மை (6.14), வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு (726), "பகையகத்துப் பேடி கை ஒள்வாள்' (727) என்னும் குறள் பகுதிகளோடு இப்பாடல் ஆய்வு செய்யத் தக்கது. இராமாயண காலத்து இராமன் இவ்வாறு கூறியதாகக் கம்பர் எழுதியுள்ளார். இராமாயண காலத்துக்குப் பிற்பட்டது சிலப்பதிகாரக் காலம். கண்ணகி அணிகலன் களைத் துறந்திருந்ததாகச் சிலம்பில் இளங்கோ பாடியுள்ளார். இதனை, சிலப்பதிகாரம் - அந்திமாலைச் சிறப்புச்செய் காதையில் காணலாம்: 'அஞ்செஞ் சீறடி அணி.சிலம்பு ஒழிய மென்துகில் அல்குல் மேகலை நீங்கக் கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள் மங்கல அணியின் பிறிதணி மகிழாள் கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள் திங்கள் வாண்முகம் சிறுவியர் பிரியச் செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்