பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 73 பவள வாணுதல் திலகம் இழப்பத் தவள வாள்ககை கோவலன் இழப்ப மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி (47-57) என்பது பாடல் பகுதி. கணவன் இருக்கும்போதே ஆடம்பர அணிகலன்களைத் துறந்த கற்புடைய மங்கையர் சீதையைத் தவிர வேறு யார் இருந்தனர்? - என்று இப்போது வினவின் 'கண்ணகி என்று பதில் கூறமுடியும். சீதையும் கண்ணகியும் அணிகலன்கள் அணிந்திருந்த மேட்டுக் குடியினர். திருமணம் ஆனதிலிருந்து இறக்கும் வரையும் தாலியைத் தவிர வேறு அணிகலனை அறியாத ஏழைப் பெண்டிரின் நிலை என்ன? அப்பாவிப் பெண்டிர் சிலர், குடிகாரக் கணவனாலோ அல்லது கள்வனாலோ தாலியையும் இழந்துவிட்டிருக்கின்றனர். சீதையைத் தவிர கண்ணகியைத் தவிர வேறு யாருளர்? - என்று இன்று கேட்கின், அணிகலன் இல்லாத அப்பாவிப் பெண்கள் அளவின்றிக் கோடிக் கணக்கில் உள்ளனர்-இவர்களும் கணவருடன் வாழும் கற்புடைய மங்கையர்களே எனலாம். மேலும் இராமன் நொந்து கூறுகிறான்: யான் நாணம் இன்றி இந்த வில்லைச் சுமந்து கொண்டுள்ளேன். வழி நடப்பவர் சிலர், வழியில் ஒரு பெண்ணை ஒருவன் கெடுக்க முயன்றால், தம்மோடு தொடர்பில்லாத பெண்ணாயினும் அவளைக் காக்கத் தீயவனோடு போராடி உயிரையும் விடுவர். யான் உரிய மனைவியைப் பிரிந்தும் அவளை மீட்டுக் காக்க இயலாதவனா யுள்ளேன் (21, 22). மேலும் இராமன் கூறுகிறான்: என் முன்னோர், கடலைத் தோண்டினர், கங்கையைக் கீழே கொணர்ந்தனர், என் தந்தை இந்திரனைக் காத்தார் - இவர்கள் வழியில் வந்த யானோ மனைவியைக் காக்க முடியாதவனாகிவிட்டேன்.