பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு வில்லைத் தாங்கிக் கொண்டிருப்பதுபோல் பழியையும் தாங்கிக் கொண்டுள்ளேன் - என்று புலம்பினான் (23, 24). குறை முடித்து மாய்வன் வருந்திய இராமனைச் சுக்கிரீவன் தேற்றினான். பின்னர் இராமன் அவனை நோக்கிக் கூறுகிறான். நீ ஆற்று வதால் ஆறுகிறேன். எனக்கு இப்போது சாவதனினும் வேறு சிறந்த செயல் ஒன்றும் இல்லை. எனது பழிதீரச் சாகவும் போகிறேன். ஆனால், சுக்கிரீவ! உனது குறையை முடித்தன்றிச் சாகமாட்டேன்: 'ஐயரீ ஆற்றலின் ஆறினேன் அலது உய்வெனே எனக்கு இதின் உறுதி வேறுண்டோ வையகத்து இப்பழி தீர மாய்வது செய்வென் நின்குறை முடித்தன்றிச் செய்கிலேன்' (27) எனது சிறு குறை கிடக்கட்டும்; முதலில் நின்குறையை முடிக்கவேண்டும் என்று உயரிய பண்புடன் கூறிய சுக்கிரீ வனிடம், நினது குறையை முடித்துவிட்டுத் தான் பிறகு நான் சாவேன் என்று இராமன் கூறுகிறான். நின்குறை முடித்தல் = சுக்கிரீவனின் மனைவியையும் உரிமையையும் வாலியிடமிருந்து மீட்டுத் தருதல். ஒருவர் குறையை மற்றவர் முதலில் முடித்துத் தருவதில் சுக்கிரீவனும் இராமனும் போட்டி போடுவது வரலாற்றில் மிகவும் சுவையான பகுதியாகும். இத்தகைய சுவைதரும் செயலை மக்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டுமே! அனுமனின் அரசியல் சூழ்வு சுக்கிரீவனும் இராமனும் இவ்வாறு உரையாடிக் கொண்டிருந்தபோது அனுமன் இடையே குறுக்கிட்டு அரசியலுக்கு ஏற்ற ஒரு சூழ்வுரை தெரிவிக்கிறான்; சீதையை