பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 75 அரக்கன் இப்பேருலகில் எங்கு வைத்துள்ளான் எனத் தேடிக் காணல் அரிது; அதற்குப் பெரும்படை வேண்டும்; சுக்கிரீவன்பால் உள்ளது சிறு படையே; எனவே, வாலியைக் கொன்று அரசு உரிமையைச் சுக்கிரீவனுக்குத் தந்தாலேயே, வாலியின் படைகளும் சேர, நமக்குப் பெரிய படை உருவாகும். அங்ஙனமானால்தான், நம்மால் சீதையைத் தேடிக் காணவும் இராவணனைக் கண்டுபிடித்துக் கொல்லவும் இயலும் என்றான். 'கொடுந்தொழில் வாலியைக் கொன்று கோமகன் கடுங்கதி ரோன்மக னாக்கிக் கைவளர் நெடும்படை கூட்டினா லன்றி கேடரிது அடும்படை அரக்கர்தம் இருக்கை ஆணையாய்' (29) கடுங் கதிரோன் மகன் = ஞாயிற்றின் மகனான சுக்கிரீவன். அவனைக் கோமகனாக - அரசனாக ஆக்க வேண்டும். நேடரிது = தேடல் இயலாதது. ஆணையான் = இராமன். இதனால், அனுமன் மிக்க அரசியல் சூழ்ச்சி (இராச தந்திரம்) உடையவன் என்பதை அறியலாம். மேலும் சொல்கிறான்: வாலியின் படையும் சேர்ந்தால் எழுபது வெள்ளம் படை திரளும்; திரளின், அப்பெரும்படை, கடல் முழுவதையும் குடிக்கச் சொன்னாலும், உலகத்தைப் பேர்த்து எடுக்கச் சொன்னாலும் எளிதின் செய்து முடிக்கும்: 'ஏழுபத் தாகிய வெள்ளத்து எம்படை ஊழியின் கடலென உலகம் போர்க்குமால் ஆழியைக் குடிப்பினும் அயன்செய் அண்டத்தைக் கீழ்மடுத்து எடுப்பினும் கிடைத்த செய்யுமால்' (33) எழுபது வெள்ளம் படை, ஊழிக் காலத்தில் கடல் பெருக்கெடுத்து உலகை மறைப்பதுபோல் - உலகைப் போர்ப்பதுபோல் உலக முழுவதும் பரவும். அங்ஙனம்,