பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. வாலி வதைப் படலம் வாலியை வதைத்தது பற்றிய தாதலின் இது இப்பெயர்த் தாயிற்று. சுக்கிரீவனின் அறைகூவல் இராம இலக்குவரும் சுக்கிரீவன், அனுமன் முதலிய வானரர்களும், வாலியைக் கொல்வதென்று முடிவெடுத்து வாலியிருந்த கிட்கிந்த மலையை அடைந்தனர். வாலியைப் போருக்கு அழைக்கும்படி இராமன் சுக்கிரீவனை ஏவினான். அதன்படி, சுக்கிரீவன், வாலியே போருக்கு வருவாயாக. உன்னைக் கொல்லுவேன் என்று கூறிக்கொண்டு, கால்களைத் தரையிலே உதைத்துக் கொண்டும் வாயை மடித்துக் கொண்டும் தோள்களைக் கைகளால் தட்டிக் கொண்டும் போர் முழக்கம் புரிந்தான். அப்போது வாலி உறங்கிக் கொண்டிருந்தான். அவனுடைய இடக்கண்ணும் இடத்தோளும் துடிக்கலாயின. 'இடித்து உரப்பி வந்துபோர் எதிர்த்தியேல் அடர்ப்பன் என்று அடித் தலங்கள் கொட்டி வாய்மடித்து அலங்கு தோள் புடைத்து கின்று உளைத்த பூசல் புக்கதுஎன்ப மிக்குஇடம் துடிப்ப அங்கு உறங்கு - வாலி திண் செவித் தொளைக்கணே' (12) வாளா ஒரளவு ஒலியுடன் அழைத்தாலே காதில் கேட்கக்கூடும்; ஆனால் இவன் இடிபோல் இடித்து அதட்டிக்