பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு கூவியிருக்கிறான். நடுத்தரமான ஒலியே போதும் என்ற நிலையிருக்க, காதின் தொளைக்குள்ளே போய்ப் புகுந்தன என்று கூறும் அளவுக்கு நிலைமை போய்விட்ட தென்றால் வாலி உறக்கத்தினின்றும் எழத்தானே செய்வான். துங்கிய புலியை எழுப்பினாற் போல’ என்பது இதுதான். ஆடவர்க்கு வலப்பக்கமும் மகளிர்க்கு இடப்பக்கமும் கண்ணும் தோளும் துடித்தால் நல்ல நிமித்தமாகும்; மாறான பக்கங்களில் துடித்தால் தீய நிமித்தம்ாகும். இதுபற்றி யான் (சு. ச) சுந்தர காண்ட விளக்கத்திலும் சிலம்புத் திறனாய்வு நூலிலும் விரிவாக விளக்கியுள்ளேன். எனவே, இங்கேயும் விளக்கம் வேண்டா. சுக்கிரீவன் கூவியதே வாலியின் சாவுக்குத் தொடக்கப் புள்ளி யாகும். எனவே, வாலிக்கு இடப்பக்கம் கண்ணும் தோளும் துடிக்கலாயின. களிற்றின் முழக்கத்தை அரியேறு (சிங்கம்) கேட்டாற் போல் சுக்கிரீவனது போர் முழக்க அறை கூவலை வாலி கேட்டான். (13). தம்பி போருக்கு அழைத்ததை அறிந்த வாலி, அவனது அறியாமையையும் இயலாமையையும் எண்ணி அண்டங்களி லெல்லாம் கேட்கும்படிச் சிரித்தான். இது எள்ளல்’ காரணமாக எழுந்த வெடிச் சிரிப்பாகும். (14) வாலியின் வெஞ்சினம் சுக்கிரீவனின் அறை கூவலைக் கேட்டு எழுந்த வாலியின் வெஞ்சினத்தைப் பல பாடல்களில் விளக்கியுள்ளார் கம்பர். வாலியின் மெய்யில் உள்ள மயிர்க்கால் துளைகளி லிருந்து வெய்ய தீப் பொறிகள் தோன்றிப் பரவினவாம். அவன் கண்கள் வடவைத் தீயும் காண்பதற்குக் கண் கூசும்படியாக நெருப்பைக் கக்கினவாம். அவனது மூக்கி