பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 79 லிருந்து வரும் மூச்சுக்காற்று புகைபோல் மேலெழுந்து வானளாவியதாம். 'போய்ப் பொடித்தன மயிர்ப் புறத்த வெம்பொறி காய்ப்பொடு உற்றெழு வட அனலும் கண்கெடத் தீப் பொடித்தன விழி தேவர் காட்டினும் மீப் பொடித்தன புகை உயிர்ப்பு வீங்கவே’ (16) வட அனல் = உலகம் அழியும் காலத்தே கடலிலிருந்து எழுந்து உலகை அழிப்பதாகக் கூறப்படும் வடவாமுகாக்கினி வாலியின் உடல் முழுவதினின்றும் நெருப்பு எழுந்தது என்று சுருக்கமாகச் சொல்லாமல், கம்பர் மூன்று விதமாகப் பிரித்துக் கூறியுள்ளார். உடல் முழுவதிலும் உள்ள மயிர்க்கால் துளைகளிலிருந்து தீப் பொறிகள் தோன்றின - வடவைக்கனலும் கூசும்படிக் கண்கள் தீ கக்கின. மூச்சுக் காற்றிலும் வெப்பப் புகை எழுந்து வானளாவியது - என மூன்று நிலைகளாகக் கூறியுள்ளார். சினம் எழுந்தபோது உடலில் வெப்பம் தோன்றுதல் இயற்கையான தன்மை என்பது பற்றி இதனைத் தன்மை அணி அமைந்தது என்று கூறலாமாயினும், பெரிய அளவில் மிகுதிப்படுத்திக் கூறியிருப்பதால் “உயர்வு நவிற்சி அணி எனலாம். தொல் காப்பியர் கூறியுள்ளபடி இதனை அலை - கொலை காரணமாக வந்த வெகுளி (சினம்) எனலாம், மெய்பாட்டியல்.10 இடியிடு தோற்றம் வாலி தன் மேல்வாய்ப் பற்களையும் கீழ்வாய்ப் பற்களையும் ஒன்றோடு ஒன்று மோதக் கடித்தானாம். அந்தப் கடிப்புப்பகுதியிலிருந்து நெருப்பு எழுந்து, முகில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் போது எழும் இடி நெருப்பைப்போல் சிந்தினவாம். அவன் தோள்களைத்