பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 81 ‘சக்கி முக்கிக்கல்’ எனப்படும் ஒரு வகைக் கற்களை ஒன்றோடென்று தேய்த்தாலும், ஒருவகை இரும்பை ஒரு வகைக் கல்லோடு தேய்த்தாலும் நெருப்பு தோன்றுவதை நாம் நேரில் காணலாம். இவ்வாறே, வாலி பற்களைக் கடித்தபோது நெருப்பு உண்டாயிற்றாம். இதற்குத் துணையாக, தோள் அணியிலுள்ள மணிகள் சிதறி விழுவது மின்னல் வீசுவது போல் தெரிவதாகக் கம்பர் இணைத்துக் கொண்டார். இக்காலத்திலும் பலர் அறியாத இடி மின்னல் தோற்றத்தை அக்காலத்திலேயே கம்பர் அறிந்து கூறியிருப்பது பாராட்டத்தக்கதாகும். இப்பாடலில் இரண்டு சுவையான உவமைகள் உள்ளன. தாரையின் தடுப்பு வாலி போருக்கு ஆயத்தமாகி இவ்வாறு ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தபோது, அவன் மனைவி தாரை வந்து சுக்கிரீவனுக்குத் துணையாயுள்ள இராமன் மிகவும் வலியவன் என்கின்றனர் - நீ போருக்குப் போக வேண்டா எனத் தடுத்தனள். 'ஆயிடைத் தாரைஎன்று அமிழ்தின் தோன்றிய வேயிடைத் தோளினாள் இடை விலக்கினாள்' (22) என்பது பாடல் பகுதி. அமிழ்தமே உருவ மானவளாம் - மூங்கில் போன்ற தோளினளாம் - தாரை. கணவன் போருக்குப் புறப்பட்டபோது மனைவி தடுத்ததைத் தெருக்கூத்துக் காட்சிகளில் யான் கண் டுள்ளேன். முடிவு கணவன் இறப்பதாகவே இருக்கும். இங்கேயும் அதே நிலைதான். சேக்சுபியர் (Shakespeare) எழுதியுள்ள ஜூலியஸ் சீசர் (Julius ceasar) என்னும் நாடகத்திலும் இத்தகைய நிகழ்ச்சி ஒன்று இடம் பெற்று உள்ளது. சிசரின் சூழ்நிலை நன்றாயில்லாததால், அவனுடைய மன்ைவி கால்பர்னியா (Calpurinia) என்னும்