பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு அரசி, மன்னன் அரண்மனையை விட்டு வெளியே போகக் கூடாது என மிகவும் கண்டிப்பாய் வற்புறுத்தி மண்டியிட்டு வேண்டிக் கொண்டாள். மன்னர்க்கு உடல் நலம் இன்மையால் அவர் பேரவைக்கு வர இயலவில்லை என்று அறிவிக்குமாறு ஆண்டனி (Antony) என்பவனிடமும் சொல்லி அனுப்பினாள். ஆயினும், மிகவும் துணிச்சலுடன் சீசர் பேரவைக்குச் சென்றான் - கொல்லவும் பட்டான். வாலியின் முடிவும் இன்னதே. தம்பியர் அன்பு சுக்கிரீவனுக்கு இராமன் துணையாய் வந்துள்ளான் என்று கூறிய தாரையை நோக்கி, இராமன் உயர்ந்த பண்பினன்; அவனைப் பழித்தல் தீவினையாகும்; அவன் என்னைக் கொல்ல மாட்டான்; இராமன் தனது அரசைத் தம்பிக்குத் தந்து விட்டான்; இதனால், அண்ணன் தம்பியர் ஒற்றுமையாயிருக்கவே இராமன் பாடுபடுவான்; தன் தம்பியரைத் தவிர வேறு யாரும் தனக்குத் துணைவரிலர் என்னும் நம்பிக்கை உடையவன் இராமன்; எனவே, யானும் என் தம்பியும் மோதும் முரணிடையே இராமன் தலையிட மாட்டான் - என்றியம்பினான். 'தம்பியர் அல்லது தனக்கு வேறுயிர் இம்பரில் இலதென எண்ணி ஏய்ந்தவன் எம்பியும் யானும்உற்று எதிர்ந்த போரினில் அம்பிடைத் தொடுக்குமோ அருளின் ஆழியான் (35) இராமன் தம்பியர் பற்று உடையவ னாதலின், யான் என் தம்பியோடு மேற்கொள்ளும் செயலில் குறுக்கிட்டு என் மேல் அம்பு போடமாட்டான்; ஏனெனில், அவன் அருள் கடலாய் (அருளின் ஆழியான்) உள்ளவன் - என ஆறுதல் கூறுவதான கருத்து வெளிப்பாடு, நயமும் திறமும் உடையதாய்க் காணப்படுகிறது. இவ்வாறாக வாலியால்,