பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 83 மிகவும் நல்லவனென நம்பப்பட்ட இராமன், பின்பு வாலியைக் கொல்லப் போகிறான் - என்ற காப்பிய முன்னோட்டச் சுவையும் இதில் அமைந்துள்ளது. கம்பர் கோட்டை விட்டார் இரணியனைக் கொல்லத் தூணிலிருந்து தோன்றிய நரசிங்கத்தைப் போல, யாவரும் அஞ்சும்படி மலைவழியே வந்து மலையின் உச்சியிலே வாலி நின்றான். கண்டார் அஞ்சும் தோற்றத்தினால் வாலிக்கு நரசிங்கத்தை ஒப்பாகக் கூறினார் கம்பர். ஆனால் இந்த உவமையில் ஒரு குறைபாடு உள்ளது. இராமனும் நரசிங்கரும் திருமாலின் தெய்வப் பிறவிகள் பத்தில் அடங்குவர். அங்ஙனமிருக்க, இராமனால் கொல்லப்படப் போகும் வாலிக்கு நரசிங்கத்தை ஒப்புமை யாகக் கூறலாமா? நரசிங்கம் இரணியனைக் கொன்றது போல் வாலி இராமனைக் கொல்லப் போகிறானா? - இல்லையே - சரி, பாடலைப் பார்ப்போம்: 'கின்றான் எதிர் யாவரும் நெஞ்சு நடுங்கி அஞ்சத் தன்தோள் வலியால் தனிமால் வரை சாலும் வாலி குன்றுடு வந்து உற்றனன் கோள் அவுணன் குறித்த வன் தூணிடைத் தோன்றிய மா நரசிங்கம் என்ன' (38) வெள்ளத்திடை அகப்பட்டவர்க்கு ஒரு துரும்பு கிடைத் தாற்போல, இங்கே நாம் கம்பரை வழுவினின்றும் காப்பாற்ற, குன்றுடு வந்து' என்னும் தொடர் உள்ளது. நரசிங்கம் தூணின் இடையிலிருந்து வந்தது போல், வாலி uso குன்றுகளினூடு புகுந்து வந்து மேலே நின்றான் - என அமைதி கூறலாம். இருப்பினும், கம்பர் கோட்டை விட்டவர் விட்டவரே! இலக்குவன் குழப்பம் வாலியும் சுக்கிரீவனும் போர்முனையில் இருக்கையில், இராமன் இலக்குவனிடம் வாலியின் வலிய தோற்றத்தைக்