பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு காண்க என்றான். இலக்குவன் கூறுகிறான்: சுக்கிரீவன் தன் தமையனின் வாழ்நாளை முடிக்கும் எமனை அழைத்து வந்திருக்கிறான். இகழ்தற்கு உரிய குரங்குத்தனமான போர் இது என்பதை எண்ணுங்கால் என் உள்ளம் குழம்புகிறது என்றான்: "வள்ளற்கு இளையான் பகர்வான்.இவன் தம்முன் வாழ்நாள் கொள்ளக் கொடுங் கூற்றுவனைக் கொணர்ந்தான் குரங்கின் எள்ளற்குறு போர்செய எண்ணினான் என்னும் இன்னல் - உள்ளத்திடை ஊன்ற உணர்ந்திலென் ஒன்றும் என்றான்' (41) வள்ளல் = இராமன். அவரவரும் அரசுப் பதவிக்கு அடித்துக் கொண்டு கிடக்கும் இவ்வுலகில், தனது அரசுரிமை யைத் தம்பி பரதனுக்கு அளித்தமையால் இராமன் வள்ளல் எனப்பட்டான். சுக்கிரீவனது செயலை இலக்குவன் உளமார ஒத்துக்கொண்டவனாகத் தெரியவில்லை. தான் தமைய னுக்குப் பணிந்தொழுகும் தூய பண்பினனாதலால், மற்றவரும் முத்தவனாகிய தமையனுக்குப் பணிந்தொழுக வேண்டும் என எண்ணுகிறான். அங்ஙனம் இன்றிச் சுக்கிரீவன் தமையனைக் கொல்ல முயல்வதால், இதை நோக்கி ஒன்றும் சொல்ல இயலாமல் குழப்பம் அடைகிறான் இலக்குவன். இப்படி ஒர் உயர்ந்த கொள்கையைக் கம்பர் இலக்குவன் வாயிலாக உலக மக்கட்குப் பரிந்துரைத்திருப்பது பெருமைக்கு உரியது. (ஆனால், இங்கே சுக்கிரீவனின் சூழ்நிலை வேறுவிதமானது என்பதையும் நினைவில் கொள்ளல் வேண்டும்.)