பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 85 பே - பே கதை மேலும் இலக்குவன் கூறுகிறான்: அறமுறை தவறி ஒழுகுபவர்களை நம்புதல் எங்ஙணம்? தன் தமையனையே பகைவனாகக் கொண்டு கொல்லத் துணியும் இவன் அயலா ராகிய நமக்குத் துணையாயிருப்பான் என்று நம்புதல் எவ்வாறு - என்று ஐயுற்றுக் கூறுகிறான்: “ஆற்றாது பின்னும் பகர்வான் அறத்தாறு அழுங்கத் தேற்றாது செய்வார்களைத் தேற்றுதல் செவ்வி அன்றால் மாற்றான் எனத் தம்முனைக் கொல்லிய வந்து கின்றான் வேற்றார்கள் திறத்து இவன் தஞ்சம்என்? வீர என்றான்' (42) தம் முன் = தம் அண்ணன். தாய், தந்தை, தமையன், ஆசான், அரசன் ஆகிய ஐவரையும் ஐம்பெருங் குரவர் எனல் மரபு. அவர்களுள் ஒருவனாகிய அண்ணனையே கொல்லத் துணிபவனை நம்ப முடியாது என இலக்குவன் ஐயுறுவதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஒருவன் மற்றொருவ ரிடம் பொருள் கடன் வாங்கினான். பின்னர், கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவனிடம் கடனைத் திருப்பித் தருமாறு கேட்டார். வாங்கியவன் தான் வாங்கவில்லை என்றான். இது நீதிமன்றத்துக்குப் போயிற்று. வாங்கிய வனின் வழக்குரைஞர், நீதிமன்றத்தில் நீதிபதி எது கேட்டாலும் பே-பே என்று சொல் - இவன் ஊமை - பைத்தியம் - வாங்கியிருக்க மாட்டான் என்று நீதிபதி வழக்கைத் தள்ளி விடுவார் என்று வாங்கியவனுக்குக் கற்றுக் கொடுத்தாராம். அதேபோல் அவன் பே - பே சொல்லி வெற்றி பெற்றான். பின்னர் வழக்குரைஞர், வாங்கியவனைப் பார்த்து வெற்றி பெற்றுத் தந்ததற்கு உரிய கட்டணத்தை எனக்குக் கொடு என்று கேட்டாராம். அவன் வழக்குரைஞ ரிடம் பே - பே என்றானாம். உடனே வழக்குரைஞர் எனக்குமா பே-பே என்றாராம். அதற்கு அவன், உனக்கும்