பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு பே-பே, உன் அப்பனுக்கும் பே-பே, உன் பாட்டனுக்கும் பே-பே என்றானாம். இந்த மாதிரியில், தனது வேலையை முடித்துக் கொண்ட பின்னர், சுக்கிரீவன் தங்கட்கு உதவி செய்வான் என்பது என்ன உறுதி என்று இலக்குவன் ஐயுற்றது ஒருவகையில் பொருத்தமே. அவ்வாறே அரசு கிடைத்ததும் சுக்கிரீவன் பே-பே போட்டான். இது குறித்துப் பின்னர்ப் பார்க்கலாம். இராமனின் அரிய உரை: சுக்கிரீவனை எவ்வாறு நம்புவது என்று ஐயுற்ற தம்பிக்கு இராமன் கூறுகிறான். உயர்ந்த தம்பியே! மனிதக் குரங்குகளாகிய இவர்களின் ஒழுகலாற்றைப் பற்றி ஒன்றும் கூறுவதற்கு இல்லை. மக்கள் பிறவி எடுத்தவர் களுக்குள்ளேயே - எந்தத் தாய் வயிற்றில் பிறந்தவரா யிருப்பினும், முன் பிறந்த தமையன் முறை உள்ளவர்க ளோடு, பின் பிறந்த தம்பி முறை உள்ளவர்கள் அனைவரும் ஒத்து அடங்கி ஒழுகுவாராயின் நம் பரதனுக்குப் புகழ் ஏது? உலகில் உண்மை உடையவர்கள் சிலரே; உண்மை அற்றவர்களே பலர். ஏதோ நட்புக் கொண்டோம் என்ற அளவில் அவரால் பெறக்கூடிய அளவு ஏதேனும் நன்மை கிடைக்குமாயின் பெற்றுக் கொள்வதோடு அமையவேண்டும். எவ்வளவு தான் புடைத்துத் தேற்றினும், குற்றம் இல்லாத வர் என்று சொல்வதற்கு உரியவராக ஒருவரும் தேறார். எனவே, நீ ஐயுறற்க என்றான். "அத்தா இதுகேளென ஆரியன் கூறுவான்.இப் பித்தாய விலங்கின் ஒழுங்கினைப் பேசலாமோ எத்தாயர் வயிற்றினும் பின்பிறந்தார்கள் எல்லாம் ஒத்தால் பரதன்பெரிது உத்தமனாவது உண்டோ' (43)