பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 87 'விற்றாங்கு வெற்பென்ன இலங்கு எழில்தோள மெய்ம்மை உற்றார் சிலர் அல்லவரே பலர்என்பது உண்மை பெற்றார் உழைப்பெற்ற பயன்பெறும் பெற்றி யல்லால் அற்றார் வைஎன்றலுக்கு ஆகுநர் ஆர்கொல் என்றான்' (44) இலக்குவன் உயர்வுபற்றி அத்தா எனப்பட்டான். ஆரியன் = இராமன். உலகில் எல்லாத் தம்பியருமே நல்லவராக இருப்பின், பரதனுக்குத் தனிச் சிறப்பு ஏது? தமையனிடம் தகராறு கொள்ளும் தம்பியரே மிகுதியா யிருப்பதால்தான், தமையனாகிய எனக்குப் பணிந்தொழுகும் பரதன் தனிப்பெருஞ் சிறப்பு உடையவனாகப் போற்றப் படுகிறான் என்று இராமன் கூறியது மிகவும் உயர்ந்த கருத்து வெளிப்பாடாகும். இது போலவே, நம்மோடு தொடர்பு கொள்பவரிடத்தில், என்ன - எவ்வளவு எதிர் பார்க்கலாமோ அன்னதையே - அவ்வளவே ஏற்றுக் கொண்டு அமைதியுற வேண்டுமே தவிர, அவர்களைப் பற்றிப் பெரிய அளவில் ஆய்வு செய்வது தேவையற்றது என்று இராமன் கூறியதும் உயர்ந்த கருத்து வெளிப் பாடாகும். இராமன் இவ்வாறு கூறியதாகக் கம்பர் அறிவித்திருக்கும் மதி நுட்பமும் எழுத்தாற்றலும் பெரிதும் பாராட்டத்தக்கன. வாலியும் சுக்கிரீவனும் மிகவும் கடுமையாகப் போர் புரிந்ததைப் பற்றிக் கம்பர் பல பாடல்களில் கற்பனை நயமுற விளக்கியுள்ளார். இறுதியில் வாலியின் தாக்குதலைத் தாங்க முடியாத சுக்கிரீவன் இராமன்பால் ஓடி வாலிமேல் அம்பு எய்யுமாறு வேண்டினான். அதற்கு இராமன், நீவிர் இருவரும் தோற்றத்தால் ஒத்திருத்தலின், வாலி யார் - சுக்கிரீவன் யார் - என என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. ஆதலால் நீ தலையில் கொடிப்பூ சூடிக்கொண்டு செல்வாயாயின், நின்னினும் வாலியை வேறு