பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு பிரித்துக் கண்டு அம்பு எய்வேன் எனக் கூறினான். அவ்வாறே சுக்கிரீவன் தலையில் கொடிப்பூ சூடிச் சென்று வாலியோடு பொருதான். மறுபடியும் தொடர்ந்த போரில் வாலியின் அடி உதையைப் பொறுக்க முடியாத சுக்கிரீவன் மிகவும் தளர்ந்து இராமன் இருக்கும் பக்கம் ஏக்கத்தோடு பார்த்தான். அந்தப் பார்வையின் பொருள், வாலியின்மேல் அம்பு எய்க என இராமனை வேண்டிக் கொள்வதாகும். அந்நேரத்தில் வாலி சுக்கிரீவனைத் தரையில் மோதி அடித்துக் கொல் வதற்காக அவனைத் தன் கைகளால் உயரே தூக்கினான். அந்த நேரம் பார்த்து இராமன் மறைந்து நின்று வாலியின் மேல் அம்பு எய்தான். கவிச்சக்கரவர்த்தி கம்பர் இங்கே மிக உயர்ந்த - நெஞ்சை அள்ளக் கூடிய - கற்பனை நயஞ் செறிந்த உவமை ஒன்றினைப் படைத்துக் காட்டிப் படிப்பவர்க்கு மகிழ்ச்சி உண்டாக்கி உள்ளார். நீரும் நெருப்பும் காற்றும் நிலமும் மிக்க வலிமை உடையன. அவை சீறின் யாராலும் தடுக்க முடியாது என்பது முன்னரே ஒரு பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நான்கின் வன்மையையும் திண்மையையும் ஒரு சேரப் பெற்றுள்ளதாம் வாலியின் மார்பு. அவனது மார்பை யாரும் எதனாலும் துளைக்க முடியாது. அத்தகைய மார்பைக் கனிந்த வாழைப் பழத்தில் ஊசி நுழைந்தாற்போல் மிகவும் எளிதாக இராமன் அம்பு புகுந்து துளைத்ததாம். 'காருண் வார்சுவைக் காதலியின் கனியினைக் கழியச் சேரும் ஊசியின் சென்றது கின்றது என்செப்ப நீரும் நீர்தரும் நெருப்பும் வன்காற்றும் கீழ்கிவந்த பாரும் சார்வலி படைத்தவன் உரத்தை அப்பகழி” (66)