பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு பூமி - 1 வியாழன் - .24 ஞாயிறு - 25 சனி - 13 புதன் - 85 - யுரேனஸ் - 22 வெள்ளி - 89 நெப்டியூன் - 20 செவ்வாய் - 71 திங்கள் - 6 மற்ற கோள்களினும் பூமி மிக்க இறுக்கம் உடையதா யிருப்பதனால்தான், மணிமேகலை நூலில் சாத்தனார் ‘மண்திணி ஞாலம் எனவும், மாணிக்கவாசகர் திருவாசகம். திருவண்டப் பகுதியில் வெளிப்பட மண்ணில் திண்மை வைத்தோன் எனவும் கூறினர் போலும். இவ்வாறு இன்னும் பல சான்றுகள் உள்ளன. இப்போது வாலியிடம் வருவோம்: வாலியின் மார்பு மண் போன்ற திண்மையும் மற்ற பூதங்களைப் போன்ற வன்மையும் உடையதெனக் கொள்ளல் தகும். வாலியின் ஆற்றாமை மார்பில் பாய்ந்த இராமனது அம்பு மார்பைத் துளைத்துக்கொண்டு முதுகுப் பக்கம் வெளியாகாதபடி அதைக் கைகளாலும் கால்களாலும் வாலினாலும் இறுகப் பிடித்துக் கொண்டான். கீழே வீழ்ந்து கிடக்கும் நிலையிலும் அவனது மற உணர்வு குன்றவில்லை. இந்தப் படையை யார் தொடுத்திருக்கக் கூடும்? தேவரா? இல்லை. அவர்கள் யான் செய்துள்ள நன்றியை மறந்து இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள்; மற்றும் அவர்களால் இவ்வாறு என்மேல் எதையும் எய்யவும் இயலாது. ஒருவேளை, இது திருமாலின் ஆழிப்படையாய் இருக்குமோ? அல்லது சிவனது சூலமோ? அல்லது குன்று துளைத்த முருகனது வேலோ? அல்லது இந்திரனின் வச்சிரப் படையோ? என்றெல்லாம் எண்ணினான்: