பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு சுக்கிரீவனின் மயக்கம் வாலியின் மலையாகிய மார்பிலிருந்து வரும் குருதி யாகிய அருவியைக் கண்ட சுக்கிரீவன், உடன் பிறப்பு என்னும் கயிற்றால் பிணிப்புண்டு, கண்ணிர் பெருக்கெடுக்க மயங்கித் தரையில் சாய்ந்து விட்டான். "வாசத் தாரவன் மார்பெனும் மலைவழங்கு அருவி ஓசைச் சோரியை நோக்கினன் உடன்பிறப்பு என்னும் பாசத்தால் பிணிப்புண்ட அத்தம்பியும் பசுங்கண் நேசத் தாரைகள் சொரிதர நெடுநிலம் சேர்ந்தான்' (78) வாசத்தார் = மணம் மிக்க மாலை. வாலியின் மார்பு மணம் மிக்க மாலை சூடியிருந்ததாம். சோரி = குருதி. நேசம் = அன்பு. உடன்பிறப்பு ஆதலின் அன்புக் கண்ணிர் சொரிந்தான். ஈண்டு, 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணிர் பூசல் தரும்' (71) என்னும் குறள் நினைவு கூரத் தக்கது. மற்றும், தான் ஆடாவிடினும் தன் தசை ஆடும்” என்னும் பழமொழியும் எண்ணத் தக்கது. உணர்ச்சி வயப்பட்டபோது, நாம் அசைக்காவிடினும், தசை தானே அசைவதை-நடுங்குவதைஉதறுவதைக் காணலாம். இராவணன் இறந்தபோதும் வீடணன் அழுதமையும் இங்கே நினைக்கத் தக்கது. குமணன் தொடர்பாக ஒரு கதை சொல்லப்படுவதுண்டு. குமண மன்னனை அவன் தம்பி இளங்குமணன் ஆட்சியைப் பறித்துக் கொண்டு நாடு கடத்தி விட்டான். குமணன் காட்டில் மறைந்திருத்தலை அறிந்து குமணன் தலையைக் கொண்டு வருபவர்க்கு ஆயிரம் பொன் பரிசு அளிக்கப்படும் என்று பறைசாற்றச் செய்தான். புலவர் ஒருவர் குமணன் தலைபோல் பொய்த் தலை ஒன்று செய்து கொண்டுபோய் இளங்குமணனிடம் காட்டினார். அதைக் கண்ட இளங்