பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 93 குமணன் உடன் பிறப்புப் பிணிப்பால் கட்டுண்டு பதறி, என் அண்ணனை உயிருடன் கொண்டு வருபவர்க்குப் "பதினாயிரம் பொன் பரிசு அளிக்கப்படும் என்று பறை சாற்றினானாம். பதினாயிரம் பொன் பரிசு என்னும் தலைப்பில் இப்படி ஒரு கதை யான் (சு.ச.) எழுதியுள்ளேன். சொத்து முழுவதையும் தாமே எடுத்துக்கொள்வதற்காக, உடன் பிறந்தவன் ஒழிந்துவிட்டால் நல்லது என்றெண்ணும் 'அருளாளர்கள் இந்த வரலாறுகளையெல்லாம் எண்ணிப் பார்ப்பாராக, செம்மைசேர் நாமம் வாலி தன் மார்பில் எய்யப்பட்ட அம்பு யாருடையது என்பதை அறிவதற்காகத் தன் வலுகொண்ட மட்டும் பறித்து எடுத்துப் பார்த்தபோது, அதில் இராமன் என்னும் பெயர் இருக்கக் கண்டான். அது, மூன்று உலகுக்கும் உரிய மூல மந்திரமாம்; தம் அடியார்க்குத் தம்மையே நல்கக் கூடியதாம்; ஏழு பிறப்பில் வரக்கூடிய துன்பங்கட்கெல்லாம் இப்பிறவியிலேயே மருந்தாக இருந்து இனி வராமல் தடுக்கக் கூடியதாம்; இராமன் என்னும் செம்மைசேர் நாமமாம். அப்பெயரைத் தன் கண்களால் வாலி தெளிவாகக் கண்டானாம். 'மும்மைசால் உலகுக் கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும் செம்மைசேர் நாமங் தன்னைக் கண்களின் தெரியக் கண்டான்' (80) இராமன் என்னும் நாமம் இன்றும் நம் நாட்டில் பரவலாகப் போற்றப்படுகிறது. அண்ணல் காந்தியடிகள்