பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 கிட்கிந்தா காண்டத் தி றனாய்வு இராமன்பால் கொண்டிருந்த அன்பு ஒரு வரலாறாகும். மக்கள், இராமன், ரீராம், இராசாராமன், கோதண்ட ராமன், சீதா ராமன், சானகி ராமன், கல்யாண ராமன், கோசல ராமன், தசரத ராமன், சிவராமன், பட்டாபிராமன், சுந்தர ராமன், அனந்தராமன், செயராமன், சேதுராமன், காசிராமன், வேங்கடராமன், அதிவீர ராமன், வரதுங்க ராமன், ரகுராமன் என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண் டிருப்பது, மக்களுக்கு இராமன்பால் உள்ள அன்பை வெளிப் படுத்துகின்றது. பிணிகள் பிறகு வராமல் தடுப்பதற்காக முன்கூட்டியே பிணிதீர்க்கும் மருந்தை மக்கள் பயன்படுத்துவது போல, பின்பு ஏழு பிறவியில் துன்ப நோய் வராமல் தடுக்கும் முன் மருந்தாக இராமன் என்னும் நாமம் உள்ளதெனப் பொருள் கூறப்படுகிறது. இங்ஙனம் கூறாமல், ஏழு பிறப்பு என்னும் நோய் எதிர்காலத்தில் தொடர்ந்து வந்துகொண்டிராமல், இப்பிறவியிலேயே வீடுபேறு நல்கும் பிறவி மருந்தாக இராம நாமம் விளங்குகிறது என்றும் பொருள் கொள்ளலாமே! சரிதான், பூரீராமஜெயம் எனக் கணக்குச் சுவடியில் மேலே எழுதிவிட்டு, கீழே பொய்க் கணக்கு-கள்ளக் கணக்கு எழுதுவோர் நூறு பிறவி எடுப்பினும் அவர்களின் துன்பம் தொலையாது. - அம்பில் இராமன் என்று எழுதப்பட்டிருப்பதைக் கொண்டு, படைக் கலத்தில் உரியவரின் பெயர் எழுதும் பழக்கம் அந்தக் காலத்திலேயே இருந்தது என அறியலாம். இந்தக் காலத்திலும் படைக்கலத்தில் அதற்கு உரிய நாட்டின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பது ஒப்பு நோக்கத் தக்கது. - - - இராமன் வடநாட்டான்; வாலி வடநாட்டின் தெற்கே உள்ளவன். இராமன் என்ற பெயர் எந்த மொழியில் எழுதப்