பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 95 பட்டிருக்கக்கூடும். இருவரும் அறிந்த மொழி எதுவோ? இங்கே மிகுதியாக ஒன்றும் சொல்வதற்கு இல்லை. கம்பர் ஓரிடத்தில் 'தென்சொல் கடந்தான் வடசொல் கடற்கு எல்லை தேர்ந்தான்” என்று கூறியிருப்பது ஈண்டு இணைத்து ஆய்தற்கு உரியது. நகையும் காணமும் அம்பு இராமனுடையது என்பதை அறிந்த வாலி, இல்லில் இருந்து வாழும் இல்லறத்தைத் துறந்த இராமன், காட்டிற்கு வந்து என் தம்பிக்கு உதவுவதற்காக வில் அறத்தையும் துறந்து மறைந்து நின்று அம்பு எய்தான். இவனால், இவன் பிறந்த ஞாயிறு மரபு நல்லறத்தைத் துறந்தது என்றெண்ணி, வெளியே இகழ்ச்சிச் சிரிப்பும் உள்ளே நாணமும் கொண்டான். . . . . "இல்லறம் துறந்த நம்பி எம்மனோர்க் காகத் தங்கள் வில்லறம் துறந்த வீரன் தோன்றலால் வேத கல்நூல் சொல்லறம் துறந்திலாத சூரியன் மரபும் தொல்லை நல்லறம் துறந்த தென்னா-நகைவர நாண்உள் கொண்டான்” (81) வில் அறம் துறத்தல் = நேருக்கு நேர்நின்று வில்போர் புரியாமல் மறைந்து நின்று அம்பு எய்தல். சூரியகுலம் இதுவரை மறைநூலில் சொல்லப்பட்டுள்ள அறத்தைத் துறந்ததில்லையாம்; இராமன் தோன்றி இந்த இழி செயலைச் செய்ததால், தொன்றுதொட்டுப் பின்பற்றிவந்த அறத்தினை அந்த மரபு இழந்து விட்டதாம். வாலி, இச்சே என்ன இது என்று ஏளனச்சிரிப்பு சிரித்தானாம். உள்ளுக்குள்ளே, இத்தகைய தரங்கெட்ட ஒருவனால் நாம் மடிய நேர்ந்ததே - தோற்று விட்டோமே என நாணமும் கொண்டானாம்.