பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 O கிராமப் புறப் பாட்டாளிகளை நோக்கி . .

நடைகளின் எண்ணிக்கை குறைவதால் தொழு உரமும் கிடைப்பது குறைந்து வருகிறது.

இந்த நிலைமைகள் நிலத்தின் சாரத்தை பாதித்துள்ளது மட்டுமல்ல நிலத்தில் அமிலச்சத்து அதிகமாகி பண்பட்ட நிலமும் கூட பாழடைந்து வருகிறது. இந்த நெருக்கடியும் வளரத்தொடங்கியிருக்கிறது.

ஐந்தாவதாக, பூச்சி மருந்து பற்றியதாகும். நவீன வித்துக் கள் அதிகமாகப்பயன் படுத்துகிறோம் நல்ல விளைச்சல் வருகிறது. அதே சமயத் தி ல் பயிர் நோய்கள் அதிகரித் துள்ளன. பயிர் நோய்கள் வராமல் தடுப்பதற்கான முயற்சி கள் நமது ஆராய்ச்சி நிலையங்களின் அரசின் முயற்சி களில் இல்லை. மனிதனுக்கு ஏற்படும் நோய்களையே தடுக்கும் முறைகளைக் காட்டிலும் சிகிச்சை முறைகள் தானே அதி கரிக்கிறது. சிகிச்சை முறையில் வருமானமும் லாபமும் அதிகம் முதலாளித்துவத்திற்கு நோயைத் தடுப்ப தைக் காட்டிலும் நோய் வந்து அதற்கு சிகிச்சை செய்வதில் கிடைக்கும் லாபத்தில் தான் அதிக அக்கறை.

அதே நிலைமை பயிர்ப் பாதுகாப்பு விஷயத்திலும் செயல் படுகிறது. பயிர்நோய்களைத் தடுக்கும் முயற்சிகள் குறைவு. அதே சமயத்தில் வளர்முக நாடுகளில் பயிர் நோய்களைப் பரப்புவதற்கும் ஏகாதிபத்திய சக்திகள் முயற்சிப் பதில் ஆச்சரியப் படுவதற்கில்லை.

புதிய புதிய பயிர் நோய்கள் ஏராளமாக வருகின்றன. எனவே ப பிர்களுக்கு மருந்து தெளிப்பது முக்கியமான விவசாய வேலைகளில் ஒன்றாகிவிட்டது.

இங்கும் பூச்சி மருந்துகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கள் பெரும்பாலும் பன்னாட்டு கூட்டு நிறுவனங்களே யாகும். அவைகள், மருந்துகளின் விலையையும் உயர்த்தி யிருக்கின்றன. மருந்துகளின் தரத்தையும் தாழ்த்தியிருக்கின் றன . இந்த நிலையில் பூச்சிகளும் சரியாக அழிவதில்லை. பயிர் நோய்களும் முழுமையாகத் தீர்வ தில்லை. அத்துடன் மருந்து தெளிப்பதில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு பயிரின் வளர்ச்சிக்கு அவசியமான உயிரினங்களும் அழிந்து விடு கின்றன. சிறிய நடுத்தர விவசாயிகள், மருந்துகள் வாங்கு வதில், அதைத் தெளிப்பதில் அதிகமான செலவுகளை சமாளிக்க வேண்டியதிருக்கிறது. *

ஆறாவதாக, விவசாயிகளுக்குள்ள கடன், கட்டணம் வரி, விலை முதலியன இன்று விவசாயிகளின் கழுத்தை நெரித்து அழுத்திக் கொண்டிருக்கின்றன.

விவசாயச் செலவுகளுக்கு. நடப்பு செலவுகளுக்கு விவசாயி கள் பெரும்பாலும் கடன் வாங்க வேண்டியதிருக்கிறது. ஆட்டு லோன், மாட்டு லோன், கிணற்று லோன், பம்பு செட் லோன், ரசாயன உர லோன், பூச்சி மருந்து