பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 1 0 5

டீசல், மின்சார மோட்டார், டிராக்டர், உபபொருள் கள், பூச்சி மருந்து முதலிய பொருள்களுக்கெல்லாம் உற்பத்தி அடக்கச் செல்வு கணக்கிட்டு விற்பனை விலை நிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால் விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய நெல், கரும்பு, பருத்தி, நிலக்கடலை, தேங்காய். குச்சிக்கிழங்கு மிளகு, சணல், கோதுமை மு தலிய பொருள்களுக்கு மட்டும் நிலத்தின் விலை, நீர்ப்பாசனச் செலவு, உழவுச் செலவு, நிலத்தைப் பண்படுத்துவதற்கான செலவு, களை யெடுத்தல் செல்வு, உரம் போடும் செலவு, பூச்சி மருந்து செலவு அறு வடைச் செலவு, போக்குவரத்துச்செலவு, முதலியவைகளைத் சேர்த்து உற். த்திச் செலவைக் கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்வது கிடையாது.

தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருள்களுக்இகல் லாம் உற்பத்தியாளர் குழுக்கள் விலை நிர்ணயம் செப் கின்றன. ஆனால் விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு மட்டும் பெரும்பாலும் உபயோகிப்போரின் குழுக்கள் தான் விலை நிர்ணயிக்கும். குழுக்களின் உறுப்பினர்கள், அரசால் நியமிக்கப்படுகிறார்கள். அதனால் நிச்சயமாக விவசாயிகளுக்கு நியாயம் கிடைப்பதில்லை.

விவசாயிகளின் விளைபொருள்களுக்குக் குறைவான விலை யை நிர்ணயித்து முதலாளிகளும் மொத்த வியாபாரிகளும் பன்ன்ாட்டுக் கூட்டுக்கம்பெனிகளின் ஏகபோக முதாளிகளும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகர்களும் கொள்ளை லாபம் அடைகிறார்கள்,

விவசாயிகளின் வாங்கும் பொருள்களுக்கும் விற்கும் பொருள்களுக்கும் இட்ையில் உள்ள ஏற்றத் தாழ்வு வித்தி பாசம் ஆண்டிற்கு இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என ஒரு கணக்குக் கூறுகிறார்கள். அப்படியானால் இந்திய விவசாயிகள் ஆண்டுதோறும்

ரூபாய் இரண்டாயிரம் கோடி El / : TT நஷ்டமடைந்து கொண்டிருக்கிறார்கள்: ஆண்டு தோறும் இந்தியப் பெரு முதலாளிகளும் பெரிய வர்த்தகர்களும் பன்னாட்டுக்

கூட்டு நிறுவன முதலாளிகளும் இந்திய விவசாயி களிடமிருந்து ரூபாய் இரண்டாயிரம் கோடிக்கு மேல் சுரண்டிக்கொள்ளையடிக்கிறார்கள் என்று பொருள்.

இந்தக் கொள்ளை இதற்கு முன் இருந்த எல்லாக் கொள்ளைகளையும் மிஞ்சி விட்டது.

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவே , நாங்கள் சாகவோ என்று பாரதி ஆங்கிலேய