பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய நாட்டின் நிலவளமும் விவசாய வளர்ச்சியும்

உலகிலேயே மிகவும் செழிப்பு மிக்க நில வளத்தைக்

கொண்ட நாடுகளில் ஒன்று பாரத தேசம் ‘’ என்ன வளம் இல்லை இந் தத்திரு நாட்டில் என்று புகழ்பாடும் திரைப் பாடலை கேட்டுக்கேட்டுப் பரவசமடைகிறோம். நாட்டு

வளத்தைப் பற்றி நமது பெரும் புலவர்கள் கம்பன் முதல் பாரதி வரை மிகவும் சிறப்பித்துப் பாடியுள்ளதைப்

படித்து மகிழ்கிறோம்.

நிலவளத்திற்குக் காரணமாக உள்ளது நீர் வளமும் மலை வளமும் காடுகளும் கடல் வளமுமாகும். நமது நாட்டின் நீர் வளம்போல் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவில் இல்லை. கங்கையும் பிரம்மபுத் திராவும் ரவியும் பியாஸும் நர்மதா வும் தபதியும் மகாநதியும் கோதாவரியும், கிருஷ்ணாவும் வடபெண்ணையும் தென்பெண்ணையும் பாலாறும் காவிரி பும் வைகையும். பொருனையும், ஆகிய நதிகள் நமது வற்றாத நீர்ச்செல்வங்களாகும்.

நமது நதிகளை இணைத்து, நமது விளை நிலத்தில் சாகு படிக்கு உத்தரவாதம், செய்தால், நாம், இந்திய நாட்டிற்கு மட்டுமின்றி வேறு பல நாடுகளுக்கும் சோறு போடலாம், உலகின் உணவுப் பிரச்னையில் பெரும் பகுதிக்குத் தீர்வு காணலாம் என்று நமது பொறியியல் வல்லுநர்களும் நிபுணர்களும் கூறுகிறார்கள்.

நமது நதிகளை இணைப்பதன் மூலம் பாசன வசதி மட்டு மல்ல, நீர் மின் நிலையங்கள் மூலம் ஏராளமான மின்சக்தி யை உற்பத்தி செய்யவும் அதன் மூலம் இந்தியாவைப்போல் பத்து இந்தியாக்களுக்கு ஒளிகொடுக்கவும்முடியும் என நமது நிபுணர்கள் கருதுகிறார்கள். இத்தகைய விரிவான நீர் மின் நிலையங்கள் மூலம் ஏராளமான எரிபொருளை மிச்சப் படுத்த முடியும். நமது நாட்டின் ரயில் போக்கு வரத்து முழுவதையும், கூட மின்மயமாக்கி விடலாம். நமது தொழிற்

சாலை இயந்திரங்களையும் தட்டின்றி இயக்க முடியும்.