பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 1 15

கைத்தறித் தொழிலுக்கும் தொழிலாளர்களுக்கும் ஏற் பட்டுள்ள கஷ்டங்களுக்குத் தீர்வு காண்பதற்குத் தற்காலிக மான சில முயற்சிகள் எடுக்கலாம். ஆனால் முதலாளித்துவ சுரண்டல் பாதையில் செல்லும் இன்றைய இந்திய அரசால் இன்றைய நெருக்கடிக்குத் தீர்வு காண முடியுமா?

நாற்பதாண்டுக் காலஅனுபவம், இந்த அரசால், அதன் கொள்கைகளால் முடியாது என்றே பதில் கூற வேண்டிய

திருக்கிறது.

முதலாவதாக, நூல் விலை ஏறிக்கொண்டேயிருக்கிறது. அதைத் தடுப்பதற்கு, அல்லது அத்தனை பொருள்களின் விலையுடனும் இணைத்து விலைவாசியை ஸ்திரப் படுத்து வதற்கு இந்திய அரசாங்கத்தின் முதலாளித்துவக் கொள்கை யால் முடியவில்லை.

இரண்டாவதாக, கைத்தறித் தொழில் உற்பத்தி விற்பனை

முறையில் இன்று கூட்டுறவுத் துறையும் தனியார் துறையும் உள்ளது.

கைத்தறித்துறையில் கூட்டுறவு அமைப்பை விரிவுபடுத்து வது, பாதுகாப்பு என்னும் கொள்கையை இந்திய அரசு முதல் மூன்று ஐந்தாண்டு திட்டக்காலங்களில் அறிவித்தது. ஆனால் இப்போது அந்தக் கொள்கையில் எந்த விதமான உயிரும் இல்லை. துடிப்பும் இல்லை. அந்தக் கொள்கை கோமாவில் கிடக்கிறது.

இன்று பல மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் நெசவாளர் கூட்டுறவு சொஸைட்டிகள் பெரும்பாலும் நெருக்கடியில் தான் செயல்படுகின்றன. அத்துடன் தமிழ் நாட்டிலும் இன்னும் சில மாநிலங்களிலும் கூட்டுறவு சொஸைட்டிகளில் கொஞ்ச நஞ்சம் இருந்த ஜனநாயகமும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் கூட்டுறவு அமைப்புகளில் பல ஆண்டுகளாகத் தேர்தல்களே கிடையாது-நடைபெறவில்லை. இல சொஸைட்டிகளில் ஆளும் கட்சி மூலம் நியமன போர்டுகள் செயல்படுகின்றன. சில சொஸைட்டிகள் தனி அதிகாரி

களின் நிர்வாகத்தில் செயல்படுகின்றன. இவைகளில் கனக்கு வழக்கில்லாத பல வகை ஊழல்கள் மிகுந்தும் குவிந்துமிருக்கின்றன. தட்டிக் கேட்பதற்கு யாருமில்லை. தம்பி சண்டப் பிரசண்டனாகி விட்ட நிலைதான்.

கூட்டுறவு சொஸைட்டிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டு மென்று நெசவாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வரு கிறார்கள். ஆயினும் அரசு அசைந்த பாடில்லை. நடந்துள்ள தேர்தல்களிலும் ஏகப்பட்ட ஊழல்கள் ஏற்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மீண்டும் அவை கலைக்கப்பட்டன.