பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 O கிராமப்புறப் பட்டாளிகளை நோக்கி.

மூன்றாவதாக, கூட்டுறவு சொஸைட்டிகளிலும் சரி, தனி ப்ார் வியாபாரிகளிடமும் சரி, துணி தேக்கம் ஏற்பட்டுள்ளது. துணி தேக்கம் என்பது தொடர்ச்சியான பிரச்னையாக உள்ளது.

கைத்தறித் துணி தேக்கத்திற்கு தீர்வுகாண கைத்தறித் துணியின் விற்பனைக்கு மாநில அளவில் கைத்தறித் துணி விற்பனை நிலையங்களை அரசு உருவக்கியது. ஆனால் அந்த அம்ைப்பிலும் இப்போது பல ஊழல்களும் முறை கேடு களும் சூழ்ந்து எதிர்விளைவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. ===

கூட்டுறவு உற்பத்தி சொசைட்டிகள், மாநில விற்பனை அமைப்பிற்கு துணிகளைக் கொடுக்கின்றன. அந்தத் துணி களுக்குரிய பணம் காலத்தில் சொஸைட்டிகளுக்குக் கிடைப்

பதில்லை, இந்த வகையில் பல கோடிக் கணக்கான ரூபாய் பாக்கி விழுந்து ஆரம்ப சொஸைட்டிகளுக்கு வரவு செலவுக் குப்பணம் இல்லாமல் போப் விடுகிறது.

ஆரம்ப சொஸைட்டிகளுக்கு வேண்டிய நிதி வசதி மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் கிடைக்கிறது. அதற்கான வட்டி விகிதம் அதிகம்.

ஆரம்ப கைத்தறி கூட்டுறவு சொஸைட்டிகள் அதிக வட்டி யில் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கி அதிக விலையில் நூல் வாங்கி குறைந்த கூலியில் நெசவாளர்களை வேலை செய்ய வைத்து உற்பத்தி செய்த துணியை யெல்லாம் மாநில விற் பனை நிலையத்திற்கு அனுப்பி, அதற்குரிய பணம் எந்த வட்டியும் இல்ல மல் கோடிக்கணக்கான ரூபாய் ஆண்டுக் கணக்காய் நின்று போப், இன்றைய கூட்டுறவு கைத்தறித் தொழில் மீண்டும் தீராத நெருக்கடியில் வந்து நிற்கிறது. கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள பல லட்சக் கணக்கான மக்களுடைய பிரச்சனை ஒரு சமுதாயப் பிரச்சனையாகும். எனவே அதை ஒரு பழங்காலத் தொழில் பிரச்சனையாக மட்டும் பார்க்கக் கூடாது.

காலத்தின் வளர்ச்சிக்கேற்ப சில மாற்றங்களுடன் கைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் வேலைப்பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அவசியமாகும்.

குறைந்த விலையில் அல்லது நியாயமான விலையில் நூல் கிடைக்கவும், இதர சாயப் பொருள்கள் கிடைக்கவும், குறைந்த வட்டியில் அல்லது பெயரளவு வட்டியில் கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சொஸைட்டிகளுக்கு கடன் கிடைக்க வும், கைத்தறி நெசவாளர்களுக்குக் குறைந்த பட்சக் கூலிக்கு உத்தரவாதம் கிடைக்கவும், நெசவுத் தொழிலாளர்களுக்கும்