பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 0 கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

நமது நீர் வளத்திற்கும் நிலவளத்திற்கும் ஆதாரமாக நிற்பது நமது மலைகளும் காடுகளும் கடலுமாகும். இமயமும் விந்திய சாத்பூரா மலைகளும் மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தெ டர்ச்சி மலைகளும் அவைகளை ஒட்டியுள்ள அடர்ந்த காடுகளும் நமது வளமான வனச் செல்வங்கள கும். ஆண்டு முழுவதிலும் தாராளமாக கப்பல்கள் உலவிவர வசதியான கடல்கள் நாட்டின் மூன்று புறங்களிலும் இருக்கின்றன. இருபருவங் களிலும் இந்தக் கடல்கள் நமக்கு மழை மேகங்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. பனிமலை இமயம் ஆண்டு முழுவதிலும் மழையாலும் பனியாலும் நமக்கு ஏராளமான தண்ணிரை அள்ளிக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. நமது நாட்டின் நீர் வளம், அராபிய நாடுகளின் எண்ணெய் வளத்தைக் காட்டிலும் உயர்ந்த மதிப்பு உள்ளதாகும் என்று நமது நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நமது சிந்து கங்கை சமவெளியும் கிழக்குக்கரை சமவெளிப் பகுதிகளும் நமது ஆறுகள் அள்ளிக் கொடுக்கும் வளத் துடன் இணைந்து நமக்கு எண்ணற்ற செல்வத்தை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சமவெளிகளிலும் அதன் ஒர்ப்பகுதிகளிலும் விளையும் தானியங்களும். காய் கனி கிழங்குகளும் கணக்கில் அடங்காதவை, எத்தனை வறட்சி ஏற்பட்டாலும் ஒரு மழை பெய்து விட்டால் நமது பூமி பசுமையை வெளிப்படுத்தி அழகு சொட்டும்.

பாரதத்தின் தென்கோடியான தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை மருதம் நெய்தல் என்று நிலத்தை நால்வகை யாகப் பிரித்து நிலவளத்திற்கு இலக்கணத்தையும் பண் பாட்டையும் வளர்த்தார்கள் நமது முன்னோர்கள்.

மானம் நேர்ந்(து)அற மனுநெறி நோக்கி

போன தண் குடை வேந்தர் புகழ் என

ஞானம் முந்திய நான்மறை யாளர்கைத்

தானம் என்னத் தழைத்தது நீத்தமே என்றும்

மணியும் பொன்னும் மயில் தழைப் பீவியும் அணியும் ஆனை வெண்கோடும் அகிலும் தன் இணையில் ஆரமும் இன்ன கொண்டு ஏகலால் வணிக மாக்களை, ஒத்தது அவ்வாரியே

-

என்றும்

முல்லையைக் குறிஞ்சியாக்கி

மருதத்தை முல்லையாக்கிப்

புல்லிய நெய்தல் தன்னைப்

பொரு வறு மருதம் ஆக்கி