பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி .

தமிழ் இலக்கியத்தில் நிலம் நான்கு வகையாகப்பிரிக்கப் பட்டிருந்தது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலப்பண்புகளி ல் நெய்தல் நிலம் கடலும் கடலைச் சார்ந்த நிலமாகச் சிறப்பித்துக் கூறப்படுகிறது. நெய்தல் நில மக்கள் மீனவர்களாவர் தமிழகத்தில், கன்னியாகுமரி, நெல்லை சிதம்பரனார், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தென் ஆற்காடு, செங்கல் பட்டு, சென்னை மாவட்டங்களும் புதுச்சேரியும் கடற் கரை உள்ள மாவட்டங்களாகும்.

இந்தியாவை மூன்று பக்கங்களிலும் சூழ்ந்துள்ள கடல்கள் வெப்பமண்டலத்தில் உள்ள கடல்களாகும். ஆண்டுமுழுவதும் மீன் பிடிப்பதற்கு பருவம் கொடுக்கும் வசதிகள், வாய்ப்பு கள் உள்ள கடல்களாகும். இதன் மூலம் நமக்கு மிகவும் சிறந்த கடல் வளம் அமைந்து இருக்கிறது.

நமது நாட்டு மீனவர்கள் பெரும்பாலும் கடல் ஒர கிராமங்களில் வசிக்கிறார்கள். அவர்கள் மிகப் பெரும் பாலும் பழைய முறையிலேயே தொழில் நடத்துகிறார் கள். அதனால் அவர்களுடைய வருவாய் குறைவாகவே உள்ளது. வறுமையிலேயே அவர்கள் வாழ்க்கை நடத்து கிறார்கள்.

அண்மைக்காலங்களில் பழைய கட்டுமரங்கள். தோனி கள், படகுகள், வலைகள், ஒரு பக்கம் நீடிக்க, சில முக்கிய இடங்களில், விசைப்படகுகளும் நடைமுறைப்

பழக்கத்திற்கு வந்திருக்கின்றன. இதில் நாட்டுப்படகு,

F

விசைப்படகுத் தகராறுகளும் ஏற்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளிலும் ஜப்பான் முதலிய கிழக்கத்திய நாடுகளிலும், சீனா முதலிய சோஷலிஸ் நாடுகளிலும் பெரிய அளவில் எந்திர மயமாக்கப்பட்டு மீன் பிடிக்கும் தொழில் அபிவிருத்தி அடைந்து, அந்த நாடுகளுக்கு இத் தொழில் நல்ல வருவாயைக் கொடுக்கிறது.

மீன்பிடித் தொழிலை நவீனப்படுத்தவும் அபிவிருத்தி செய்யவும் முதலில் அதற்கான அடிப்படைக் கட்டுமான சாதனங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும். கடற்கரை நெடுகிலும் முக்கியமான கேந்திரங்களில் மீன்பிடித் துறை முகங்கள் நவீன முறையில் கட்டப்பட வேண்டும். உதாரண மாக எண்ணுரர், சென்னை சதுரங்க பட்டின கடற்கரைப் பகுதி, மரக்கானம், புதுச்சேரி, கடலூர், தரங்கம்பாடி, நாகபட்டினம், கோடிக்கரை, மீமிசல், தொண்டி, மண்ட பம், ராமேஸ்வரம், கீழக்கரை, மாரியூர், துரத்துக்குடி, இடிந்தகரை, குளச்சல் இன்னும் இது போன்ற கடற்கரைப் பட்டினப்பாக்கங்களில் வாய்ப்புள்ள இடங்களில் ஆய்வு